நடிகர் சல்மான் கானுக்கு இன்று 56வது பிறந்தநாள். இதை நேற்று இரவே பாலிவுட் நட்சத்திரங்களுடன் சேர்ந்து கொண்டாடினார் சல்மான். அவரின் சகோதரி அர்பிதா கான் சர்மாவின் மகன் அயத் சர்மாவுக்கு நேற்று பிறந்தநாளாகும். எனவே இரண்டு பேரின் பிறந்தநாளையும் ஒரே நேரத்தில் கொண்டாட சல்மான் கான் முடிவு செய்து ஏற்பாடு செய்திருந்தார். பிறந்தநாளையொட்டி சிறப்புப் பார்ட்டிக்கும் வீட்டில் ஏற்பாடு செய்திருந்தார்.

இந்தப் பிறந்தநாள் பார்ட்டியில் நடிகை பூஜா ஹெக்டே, கார்த்திக் ஆர்யன், சுனில் ஷெட்டி, தபு, சித்தாந்த் சதுர்வேதி, ரிதேஷ் தேஷ்முக், அவர் மனைவி ஜெனிலியா உட்படப் பலர் கலந்து கொண்டனர். விழாவில் சல்மான் கானும், அவர் மருமகனும் சேர்ந்து கேக் வெட்டி பிறந்தநாளைக் கொண்டாடினர். விழாவில் சல்மான் கான் கறுப்பு ஆடை அணிந்து காணப்பட்டார். சல்மான் கானுக்கு வாழ்த்து தெரிவிக்க அவரது வீட்டுக்கு வெளியில் ஏராளமான பத்திரிகையாளர்கள் மற்றும் ரசிகர்கள் காத்திருந்தனர்.
+ There are no comments
Add yours