Avatar 2 Collection : அவதார் 2 திரைப்படம் டிச. 16ஆம் தேதி வெளியானது. அவதார் படத்தின் முதல் பாகம் 2009ஆம் ஆண்டு டிச. 18ஆம் தேதி வெளியாகி பிரம்மாண்டு வெற்றியை பெற்றது. இதையடுத்து, சுமார் 13 ஆண்டுகள் கழித்து, அதே ஜேம்ஸ் கேம்ரூன் இயக்கத்தில் அவதார் படத்தின் இரண்டாம் பாகம் வெளியாகி உள்ளது.
உலகம் முழுவதும் 2D, 3D, IMAX ஃபார்மட்களில் வெளியாகியுள்ளது. அவதார் 2 திரைப்படம் இந்தியாவிலும் உலகெங்கிலும் அதன் முதல் பாகத்தை போலவே விமர்சகர்களிடம் இருந்து சிறப்பான விமர்சனங்களைப் பெற்றுள்ளது. குடும்ப வாழ்வு குறித்து மிகப்பெரும் கதையாடலில் உருவாகியுள்ள இத்திரைப்படம், குடும்பங்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. பிரம்மாண்ட காட்சிகள், த்ரூபமான கிராப்கிஸ் உள்ளிட்டவையும் படத்திற்கான பார்வையாளர்களை ஈர்த்து வருகிறது.
மேலும் படிக்க | கமல்ஹாசனுடன் நடிகை நதியா நடித்ததே இல்லை! ஏன் தெரியுமா?
தற்போது படம் வெளியாகி 10 நாள்களை கடந்துவிட்ட நிலையில், உலகம் முழுவதும் பெரும் வசூல் சாதனையை நிகழ்த்தி வருகிறது. உலகளவில் மொத்தம் 855 மில்லியன் அமெரிக்க டாலரை வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது.
அமெரிக்காவில் 253.7 மில்லியன் டாலர் வசூலையும், அதை தவிர்த்து பிற நாடுகளில் 600 மில்லியன் அமெரிக்க டாலரையும் இந்த 10 நாள்களில் அவதார் குவித்துள்ளது. அமெரிக்காவில் பனிப்புயல் அசூரத்தாண்டவம் ஆடிவரும் நிலையிலும், அவதார் 2 தனது வசூல் வேட்டையை நிறுத்தவேயில்லை. மேலும், அமெரிக்காவில் கொரோனா அச்சமும் அதிகரித்துள்ளது.
இதனால், புத்தாண்டிற்குள் அவதார் 2 திரைப்படம் 1 பில்லியன் (100 மில்லியன்) அமெரிக்க டாலரை வசூலை குவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்காவுக்கு அடுத்த படியாக சீனாவில் 100.5 மில்லியன் அமெரிக்க டாலரையும், தென்கொரியாவில் 53 மில்லியன் அமெரிக்க டாலரையும், பிரான்ஸில் 52.3 மில்லியன் அமெரிக்க டாலர்களையும், இந்தியாவில் 37 மில்லியன் அமெரிக்க டாலர்களையும், ஜெர்மனியில் 35.7 மில்லியன் அமெரிக்க டாலர்களையும் அவதார் குவித்துள்ளது.
இருப்பினும், அவதார் முதல் பாகத்தின் வசூலை அவதார் 2 திரைப்படம் முறியடிப்பது சற்று கடினம். அவதார் முதல் பாகம் உலகெங்கும் சுமார் 2.9 பில்லியன் அமெரிக்க டாலரை வசூலித்தது. ஆனால், தற்போது, சீனா உள்ளிட்ட நாடுகளில் கொரோனா தொற்று அதிகரிப்பால் வசூல் சற்று பின்னடைவை சந்திக்க வாய்ப்புள்ளது. அதுமட்டுமில்லாமல் முதல் பாகம் ரிலீஸ் ஆகியிருந்த ரஷ்யாவில் போர் காரணமாக இரண்டாம் பாகம் வெளியாகவில்லை. அவதார் முதல் பாகம் ரஷ்யாவில் 116 மில்லியன் அமெரிக்க டாலரை வசூலித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க | Thalapathy67, AK62: ஒரே நேரத்தில் விஜய் மற்றும் அஜித் படங்களில் நடிக்கும் த்ரிஷா!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ
+ There are no comments
Add yours