கமல் தயாரிப்பில் உதயநிதிக்கு பதிலாக நடிக்கப்போவது யார்? படப்பிடிப்பு எப்போது? |raj kamal production’s 54th movie update

Estimated read time 1 min read

இதனால் ராஜ்கமல் தயாரிப்பின் 54-வது படமாக உருவாகும் படத்தில் உதயநிதிக்கு பதில் நடிக்கப் போவது யார் என்றும், படத்தை பிரசாந்த் முருகேசன் தான் இயக்குகிறாரா என்பது குறித்தும் பேச்சு எழுந்தது. இப்போது அந்தக் கேள்விகளுக்கு விடை கிடைத்திருக்கிறது.

ராஜ்கமல் தயாரிக்கும் படத்தில் உதயநிதிக்கு பதிலாக விஜய் சேதுபதியை நடிக்க வைப்பதற்காக பேசி வருகிறார்கள். அதனை பிரசாந்த் முருகேசன் தான் இயக்குகிறார் என்கிறார்கள். இதுகுறித்த அதிகார பூர்வ அறிவிப்பு எப்போது வெளியாகும்? படப்பிடிப்பு எப்போது தொடங்கும் என்பது குறித்தும் விசாரித்தோம்.

கமல், விஜய்சேதுபதி

கமல், விஜய்சேதுபதி

கமலின் குட்புக்கில் இருக்கும் விஜய்சேதுபதி, இப்போது பாலிவுட்டில் பிஸியாக நடித்து வருகிறார். ‘மெர்ரி கிஸ்துமஸ்’, ‘ஜவான்’, ‘காந்தி டாக்கீஸ்’, ‘மும்பைக்கார்’, தமிழில் ‘விடுதலை’ என பல படங்களில் நடித்து வருகிறார்.

பிரசாந்த் முருகேசன்

பிரசாந்த் முருகேசன்

‘கிடாரி’ இயக்குநர் பிரசாந்த் முருகேசனும் இன்னொரு பக்கத்தில் பிஸியாக இருக்கிறார். அவர் கௌதம்மேனனுடன் இணைந்து ‘குயின்2’ வெப்சீரீஸை இயக்கி வருகிறார். அதன் படப்பிடிப்பு நிறைவடையும் கட்டத்தில் இருக்கிறது. இது தவிர அதர்வா, ‘ஜெய்பீம்’ மணிகண்டன் நடிப்பில் வெப்சீரீஸ் ஒன்றையும் அவர் இயக்கி வருகிறார். அது ஆக்‌ஷன் டிராமா என்றும், அதன் படப்பிடிப்பும் பெரும்பகுதி நிறைவடைந்து விட்டது என்றும் சொல்கிறார்கள்.

Source link

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours