Varisu Audio Launch: “சிம்பு மட்டுமல்ல, அனிருத்தும் ஒரு பாட்டு பாடியிருக்கார்!” – தமன் நெகிழ்ச்சி | Varisu Audio Launch; Prakash Raj, Sarathkumar and Thaman speech highlights

Estimated read time 1 min read

இதில் ‘வாரிசு’ திரைப்படம் குறித்தும் விஜய் குறித்தும் நெகிழ்ச்சியாகப் பேசியுள்ளார் நடிகர் பிரகாஷ் ராஜ்.

“ஹாய் செல்லம், லவ் யூ…” என ‘கில்லி’ பட சிக்னேச்சர் டைலாக்குடன் தனது பேச்சை ஆரம்பித்த பிரகாஷ் ராஜ், “ரொம்ப சந்தோஷமா இருக்கு… நான் தளபதியோட 14 வருஷத்துக்கு அப்புறம் ஒரு படம் பண்றேன். சரத்குமார் என் இளைய தம்பி, வயசே ஆகாது இவருக்கு! ஷூட்டிங் நடக்கும்போது விஜய் வீட்டுக்குக் கூப்பிடுவார். குடும்பம் மாதிரி பார்த்துப்பாரு.

பிரகாஷ் ராஜ்

பிரகாஷ் ராஜ்

‘வாரிசு’ யாருன்னு பார்த்தா அது விஜய்தான். விஜய் மாதிரி நடிகர்களால்தான் மொழியைத் தாண்டி திறமைகளைக் கொண்டு வர முடியும். ‘வாரிசு’ முதல் நாள் ஷூட்டிங்கில் விஜய்யின் கண்ணுக்கு கண் பார்த்து ஒரு வசனம் பேசினேன். அந்த காட்சி முடிந்தவுடன் ‘செல்லம்… இந்தக் கண்ணைப் பார்த்து எவ்ளோ நாளாச்சுன்னு’ விஜய் நெகிழ்ந்து பேசினார். விஜய் ரசிகர்களுக்காகப் பலவற்றைப் பார்த்து செய்கிறார். க்ளைமாக்ஸ் காட்சியில விஜய் ரொம்பவே பிரமாதமாக நடிச்சிருக்காரு. முதல் முதலாக இங்கே சொல்கிறேன். நான் விஜய்யின் ரசிகனாக மாறிவிட்டேன். வெற்றிக்கு வாரிசு, விஜய்… நீங்க உங்க குடும்பத்தோட, தமிழ்நாடோட, இந்தியாவோட வாரிசு… நீங்க எல்லாரையும் நேசிக்க வேண்டியது நிச்சயம். இந்தத் திரைப்படம் நல்ல நோக்கத்தில் எடுக்கப்பட்ட படம்.” என்றார்.

Source link

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours