மேடையில் ரசிகர்களுக்கு ரஞ்சிதமே பாடல் ஸ்டைலில் முத்தம் கொடுத்தபடியே தனது பேச்சைத் தொடங்கினார் விஜய்.
“வம்சி சொன்ன கதையை ஒரு தடவ கேட்டாலே ஓகே சொல்லிடுவாங்க… நம்ம நண்பா நண்பிகள் எல்லாரும் ஒரு குடும்பம் மாதிரி தான் அவங்களுக்காகத்தான் இந்த படம். பாடலாசிரியர் விவேக்குள்ளே ஒரு இயக்குநர் இருக்கிறார். அதை இனி பார்ப்பீர்கள். தமன் புல்லாங்குழல் வைத்து கூட டிரம்ஸ் வாசிப்பார். அது போன்று பாடல்களுக்கு பீட் போட்டு வைத்திருக்கிறார்.
வில்லன்னு சொன்னா நிறைய பேரோட பேரு மைண்ட்டுக்கு வரும். ஆனா, செல்லம்னு சொன்னா ‘முத்துப்பாண்டி’ பிரகாஷ்ராஜ் மட்டும்தான் ஞாபகம் வருவாரு. கில்லி, சிவகாசி யைத் தொடர்ந்து இந்த படத்திலும் பிரகாஷ் ராஜ் உடனான கூட்டணி தொடர்ந்துள்ளது. குஷ்பூ மேம்மை பார்த்தால் கமலா தியேட்டரில் சின்ன தம்பி படத்தை கேர்ள் பிரண்ட் உடன் போய் பார்த்த ஞாபகம் வருகிறது. ரத்தத்துக்கு மட்டும்தான் ஏழை பணக்காரன், உயர்ந்த ஜாதி, தாழ்ந்த ஜாதி ரொம்ப முக்கியமா எந்த மதம்னு தெரியவே தெரியாது.
ரத்தத்துக்கு எந்தப் பிரிவினையும் கிடையாது. மனுசங்கதான் எல்லா பிரிவினையையும் பார்க்குறோம். ரத்தத்துக்கிட்ட இருந்து அந்தத் தன்மையை நாம கத்துக்கணும்.
அதனாலதான் ரத்ததானத்தை ரசிகர்கள் மூலமா ஊக்குவிக்கிறேன். வாய்ப்பு கிடைக்கிறப்பல்லாம் நன்றி சொல்லிக்கிட்டே இருக்கணும். என்னை உருவாக்கிய உளிகளான ரசிகர்களுக்கு நன்றி. பிரச்னைகள் வருது. நம்மல எதிர்க்கிறாங்கன்னா நாம கரெக்ட்டா போய்க்கிட்டு இருக்கோம்னுதான் அர்த்தம்.”
+ There are no comments
Add yours