மின்சார ஊழியர்களுக்கு பேரிடர் காலத்தில் சிறப்பாக செயல்பட்டதற்காக டேன்ஜட்கோ மின்னகம் துணிவு படத்தின் லோகோவோடு வாழ்த்து கூறியிருக்கும் நிலையில், “படத்துக்கான விளம்பரத்தை இதிலுமா செய்வீர்கள்” என கேள்வி எழுப்பி வருகின்றனர் நெட்டிசன்கள்.
தமிழ்நாட்டின் இருபெரும் ஸ்டார் நடிகர்களான அஜித் மற்றும் விஜய் இருவரின் துணிவு மற்றும் வாரிசு படங்கள், வரும் பொங்கலை ஒட்டி ஒன்றாக வெளியாகவிருக்கும் நிலையில், தியேட்டர்கள் கிடைப்பதற்கான சிக்கல்கள் தொடங்கி, படத்தின் முதல் சிங்கிள், பாடல்கள் என ஒவ்வொன்றாக வெளியாகி ரசிகர்கள் இடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது.
துணிவு – வாரிசு படத்திற்கான தியேட்டர் பிரச்சனை!
துணிவு பட தயாரிப்பு நிறுவனமான உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் நிறுவனம், அஜித்தின் துணிவு படத்திற்காக தமிழகத்தில் தியேட்டர்களை பாதிக்கும் மேல் கைவசம் வைத்திருப்பதாகவும், அதனால் வாரிசு படத்திற்கான தியேட்டர்களை ஒதுக்குவதில் பெரிய சிக்கல் ஏற்பட்டதாகவும் சமீபத்தில் சர்ச்சையானது. இந்நிலையில் இது ரசிகர்களிடையே தொடர்ந்து பேசுபொருளாக மாறியது.
ரசிகர்கள் மட்டுமன்றி, அரசியல் ரீதியாகவும் ரெட் ஜெயிண்ட் நிறுவனத்தின் தியேட்டர் கையிருப்பு குறித்து பல விமர்சனங்கள் வைக்கப்பட்டன. அதிமுகவின் சில அரசியல் பிரமுகர்கள் கூட, “வாரிசு படத்தை ரிலீஸ் செய்யவிடாமல் செய்யும் வாரிசு” என அமைச்சர் உதயநிதி மீது தொடர் விமர்சனங்களை வைத்துக்கொண்டே இருக்கின்றனர்.
விஜய் பிரியாணி விருந்து வைத்து ரசிகர்களுடன் நடத்திய சந்திப்பு!
தியேட்டர் பிரச்சனை பெரிதானதையடுத்து விஜய் அவருடைய மக்கள் இயக்க நிர்வாகிகள் மற்றும் ரசிகர்களை சந்திக்கும் ஒரு ஏற்பாடு செய்திருந்தார். அதில் ரசிகர்களுக்கு சுடச்சுட பிரியாணி தயார் செய்யப்பட்டு பரிமாறப்பட்டது. விஜய்யின் இந்த சந்திப்பு தியேட்டர் பிரச்சனைக்கான எதிர்வினையாகவே பார்க்கப்பட்டது.
வாரிசு பட இசை வெளியீட்டு விழாவால் ஸ்தம்பித்த இணையதளம்!
இப்படியான சூழலில்தான் நேற்று வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழா கோலகலமாக சென்னையில் நடந்து முடிந்தது.
பொதுவாக விஜய் தனது ஒவ்வொரு படத்தின் ரிலீஸீன் போதும் பல சிக்கல்களை சந்திப்பார். பின்னர் அதைசரிசெய்த பிறகு நடக்கும் இசை வெளியீட்டு விழா நிகழ்ச்சியில் ஒரு குட்டிகதை மூலம் அவருடைய நிலைப்பாடை தெரிவிப்பார். அதனால் தற்போதும் அதை எதிர்பார்த்து சென்ற ரசிகர் கூட்டத்தால் நேரு உள்விளையாட்டு அரங்கமே ஸ்தம்பித்தது.
அதுபோக விஜய் ஒரு செல்பி வீடியோவை எடுத்து அதை ட்விட்டரில் போட, அது ஒரு மணிநேரத்திற்குள்ளாகவே 1 மில்லியன் பார்வையாளர்களை கடந்து ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. மேலும் அவருடைய ரசிகர்கள் நேற்றிலிருந்து #என்நெஞ்சில்குடியிருக்கும் மற்றும் வாரிசு ஹேஸ்டேக்குகளை டிரெண்டிங்கிலேயே வைத்திருக்கின்றனர்.
#EnNenjilKudiyirukkum pic.twitter.com/4rbooR4XLa
— Vijay (@actorvijay) December 24, 2022
துணிவு லோகோவை வைத்து TANGEDCO வெளியிட்ட வாழ்த்து!
இப்படியான சூழலில்தான், மின்சார ஊழியர்களுக்கு பேரிடர் காலங்களில் பணிபுரிந்ததற்காக வாழ்த்து ஒன்றை TANGEDCO அதன் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் நேற்று வாரிசு இசை வெளியீட்டு சமயத்தில் வெளியிட்டுள்ளது. அதில், “மழை மற்றும் இயற்கை பேரிடர் காலங்களில் மக்களுக்கு தடையின்றி சீரான மின்சாரம் வழங்கிட தன் உயிரை பணயம் வைத்து பாடுபடும் மின்வாரிய ஊழியர்களுக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துகள்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
#TANGEDCO #டான்ஜெட்கோ#MINNAGAM #மின்னகம்#TNEB pic.twitter.com/g7ZeiukjUP
— TANGEDCO Official (@TANGEDCO_Offcl) December 24, 2022
TANGEDCOவின் துணிவு லோகோவிற்கு விமர்சனம் செய்துவரும் நெட்டிசன்கள்!
ஆனால் வாழ்த்துடன் துணிவு பட லோகோவுடன் TANGEDCO என சேர்த்து பதிவிட்டது தற்போது விமர்சனத்திற்குள்ளாகி வருகிறது. TANGEDCO மின்னகம் ரெட் ஜெயண்ட் புரடக்சனிற்காக விளம்பர வேலைகளில் இறங்கியுள்ளதா என ரசிகர்கள் கேள்விகளை பதிவிட்டு வருகின்றனர். குறிப்பாக இதை ஏன் இந்த நேரத்தில் பதிவிட வேண்டும் என்றும் கேட்டுள்ளனர் பலரும்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
+ There are no comments
Add yours