அஜித் நடிக்கும் ‘துணிவு’ படத்தின் மூன்றாவது பாடலான ''கேங்ஸ்டா'' வெளியாகி வைரலாகி வருகிறது.
அஜித்தின் துணிவு படத்தின் ‘சில்லா சில்லா’ பாடல் கடந்த மாதம் 9-ம் தேதி வெளியானது. இரண்டு கோடி பார்வையாளர்களை கடந்து உலக அளவில் இந்தப் பாடல் ட்ரெண்டிங்கில் நம்பர் ஒன் இடத்தை பிடித்துள்ளது. அதேபோல், மூன்று தினங்கள் முன் இப்படத்தின் இரண்டாவது சிங்கிளான ‘காசே தான் கடவுளடா’ பாடல் வெளியானது. இதற்கும் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது.
+ There are no comments
Add yours