உலகம் முழுவதும் இன்று, கிறிஸ்துமஸ் தினம் விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. ஹாலிவுட், பாலிவுட், கோலிவுட் என அனைத்து திரையுலக பிரபலங்களும் ரசிகர்களுக்கு வாழ்த்து தெரிவித்த வண்ணம் உள்ளனர். அவர்களில், சிலரது வாழ்த்துகளை இங்கே பார்க்கலாம் வாங்க.
ஐஸ்வர்யா ராய்
பிரபல நடிகை ஐஸ்வர்யா ராய், தனது மகளுடன் எடுத்துக்கொண்ட போட்டோவை தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டார். மேலும், அனைவருக்கும் “Merry Christmas” என கிறிஸ்துமஸ் வாழ்த்தினை கூறியுள்ள அவர், அனைவரும் அன்பு, அமைதி, நல்ல உடல் நலம் பெற்று மகிழ்ச்சியுடன் இருக்குமாறும் தனது பதிவில் கூறியுள்ளார்.
News Reels
சிவாஜி பட புகழ் ஸ்ரேயா, மக்கள் அனைவருக்கும் கிறிஸ்துமஸ் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். சிகப்பு நிற உடையணிந்தவாறு சில புகைப்படைங்களை வெளியிட்டுள்ள அவர், இந்த உடையை அணிந்ததாக குறிப்பிட்டுள்ளார்.
சதாவின் பதிவு
முன்னாள் முன்னனி நடிகையாக இருந்தவர் சதா. அந்நியன், உன்னாலே உன்னாலே உள்ளிட்ட பல முன்னணி படங்களில் நடித்துள்ளார். இவர், ரசிகர்கள் அனைவருக்கும் கிறிஸ்துமஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
ரம்யா பாண்டியன்
குக் வித் கோமாளி, பிக் பாஸ் உள்ளிட்ட் நிகழ்ச்சிகளின் மூலர் மக்களிடையே பிரபலமானவர் நடிகை ரம்யா பாண்டியன். இவர், பல வண்ணங்கள் நிறைந்த கவுன் போன்ற உடையணிந்த சில புகைப்படங்களை வெளியிட்டு, தனது கிறிஸ்துமஸ் வாழ்த்தினை பதிவு செய்துள்ளார்.
ராஷ்மிகா மந்தனா
விஜய்யுடன் வாரிசு படத்தில் ஜோடியாக நடித்துள்ளவர் ராஷ்மிகா மந்தனா. இவர், நேற்று நடைப்பெற்ற வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டார். இவர், ரசிகர்களுக்கு தனது கிறிஸ்துமஸ் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
கௌதம் கார்த்திக்-மஞ்சிமா மோகன்
கோலிவுட்டின் புதிய ஜோடி கௌதம் கார்த்திக்-மஞ்சிமா மோகன். ரசிகர்களிடையே க்யூட் கப்புள்சாக உலா வரும் இவர்கள் அவ்வப்போது சில புகைப்படங்களையும் பதிவிடுவர். ரசிகர்களுக்கு கிறிஸ்துமஸ் வாழ்த்து தெரிவிக்கும் வகையில், முத்த மழை பொழிந்தவாறு சில போட்டோக்களை மஞ்சிமா வெளியிட்டுள்ளார்.
Also Read|பாராட்டுகளை குவித்து ட்ரெண்டிங்கில் இருக்கும் அமலா பாலின் ‘தி டீச்சர்’
சனம் ஷெட்டி
பிரபல நடிகை சனம் ஷெட்டி அனைவருக்கும் கிறிஸ்துமஸ் வாழ்த்துகளை தனது இன்ஸ்டா பதிவின் மூலம் தெரிவித்துள்ளார்.
ஜனனி ஐயர்
Merry X’mas everyone! 🎄🎉❤️ #MerryChristmas pic.twitter.com/GPc1hOafj0
— Janani (@jananihere) December 25, 2022
”வின்மீன் விதையில் நிழலாய் முளைத்தேன்..”என்ற பாடல் மூலம் மக்களின் மனதில் இடம் பிடித்தவர் ஜனனி ஐயர். இவர், அவன் இவன் மற்றும் தெகிடி உள்ளிட்ட படங்களில் முக்கிய கதாப்பாத்திரமாக வந்து பிரபலமானார். இவர், ட்விட்டர் பதிவின் மூலம் அனைவருக்கும் கிறிஸ்துமஸ் தின வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
+ There are no comments
Add yours