படப்பிடிப்பு தளத்தில் பாலிவுட் நடிகை தற்கொலை  | actress Tunisha Sharma suicide

Estimated read time 1 min read

பாலிவுட் நடிகை துனிஷா ஷர்மா படப்பிடிப்பு தளத்தில் இருந்தபோது தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். அவருக்கு வயது 20.

குழந்தை நட்சத்திரமாக நடித்து ரசிகர்கள் மனதை பெரிதும் கவர்ந்து வந்தவர் நடிகை துனிஷா சர்மா. சல்மான் கானுடன் தபாங் 3, கஹானி உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கும் இவர் ‘அலி பாபா தஸ்தான் இ காபூல்’ எனும் டிவி தொடருக்கான படப்பிடிப்பு தளத்தில் இருந்துள்ளார். அப்போது சிகை அலங்காரத்திற்காக அறைக்கு சென்றபோது நீண்ட நேரமாகியும் அவர் வெளியே வரவில்லை. படப்பிடிப்புக்கு நேரமாகிக்கொண்டிருந்த நிலையில், அவர் இருந்த அறைக்கதவை உடைத்து உள்ளே நுழைந்து பார்த்தபோது அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

இதனால் அதிர்ச்சியடைந்த படக்குழுவினர், துனிஷா ஷர்மாவை உடனடியாக அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு மருத்துவர் அவரை பரிசோதனை செய்ததில் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தார். அவரது இந்த முடிவு திரையுலகினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Source link

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours