வாரிசு படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நேற்று பிரம்மாண்டமாக நடைபெற்று முடிந்த நிலையில், மேடையில் இருந்தபடி திரளாக வந்திருந்த தன் ரசிகர்களுடன் விஜய் எடுத்துக் கொண்ட வீடியோ இணையத்தில் வைரலாகி உள்ளது.
சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் நேற்று (டிச.24) மாலை தொடங்கி வாரிசு ஆடியோ வெளியீட்டு விழா பிரம்மாண்டமாக நடைபெற்றது.
இவ்விழாவுக்கு கிரே நிற சட்டை, வெள்ளை பேண்ட் சகிதம் அரங்கம் அதிர விஜய் மாஸ் எண்ட்ரி கொடுத்தார். ரசிகர்கள் அருகிலேயே விஜய்யை பார்க்கும் வகையில் தனி பாதை அமைக்கப்பட்டிருந்த நிலையில், அதில் நடந்து சென்று விஜய் ரசிகர்களை உற்சாகப்படுத்தினார்.
தொடர்ந்து இசை வெளியீட்டு விழாவில், நடன இயக்குநர்கள் ஜானி, ஷோபி, பாடலாசிரியர் விவேக், நடிகர்கள் பிரகாஷ் ராஜ், சரத் குமார், ராஷ்மிகா உள்ளிட்ட படக்குழுவினர், இயக்குநர் வம்சி, தயாரிப்பாளர் தில் ராஜூ உள்ளிட்ட பலரும் விழா மேடையில் பேசி ரசிகர்களை உற்சாகப்படுத்தினர். மறுபுறம் விஜய்யின் இண்ட்ரோ பாடலான வா தலைவா தொடங்கி பாடகர்கள் வரிசையாக அனைத்து பாடல்களையும் பெர்ஃபார்ம் செய்தனர்.
News Reels
இந்நிலையில், விழாவின் முக்கியக் கட்டமாக இறுதியாக மேடையேறிய விஜய், அரங்கம் முழுவதும் குவிந்திருந்த ரசிகர்களுடன் செல்ஃபி வீடியோ எடுத்தார்.
#EnNenjilKudiyirukkum pic.twitter.com/4rbooR4XLa
— Vijay (@actorvijay) December 24, 2022
தொடர்ந்து “எனக்கு ட்வீட் போட தெரியாது.. என்னோட அட்மின கூப்பிடுறேன்..” எனக் கூறி தன் மேலாளர் ஜெகதீஷை அழைத்து ட்வீட் பகிருமாறு கேட்டுக்கொண்டார்.
விஜய்யின் ட்விட்டர் பக்கத்தில் பகிரப்பட்ட இந்த ட்வீட், எட்டு மில்லியனுக்கும் மேற்பட்ட பார்வையாளர்களைப் பெற்று வரைலாகி வருகிறது.
அதேபோல் ரஞ்சிதமே பாடலை மேடையில் விஜய் பாடி அசத்தியதோடு குட்டி ஸ்டெப் போட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளார். ராஷ்மிகா, தமன் ஆகியோர் ரசித்துப் பார்க்கும் இந்த வீடியோவை முன்னதாக நடன இயக்குநர் ஜானி தன் ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருந்தார்.
#Ranjithame 🔥 #Thalapathy 😍🤩 pic.twitter.com/WlhOHClH2D
— Jani Master (@AlwaysJani) December 24, 2022
இந்த வீடியோ அதிக ரீட்வீட்களைப் பெற்று ஹிட் அடித்துள்ளது. தொடர்ந்து பேசிய விஜய், “இந்த படத்தில் எனக்கு சூப்பராக ஒன்று சிக்கியது. இனி உங்களுக்கு முத்தம் கொடுக்க ரஞ்சிதம் ஸ்டைலை தான் பயன்படுத்த போகிறேன். இனி இதுதான்” எனக்கூறி தன் ரசிகர்களுக்கு முத்தங்களை பறக்க விட்டார்.
“எனக்கு போட்டியாக 1992இல் ஒரு நடிகர் வந்தார். அவரை ஜெயிக்க வேண்டும் என்று நான் ஓடினேன். ஆனால் அவர் எங்கு சென்றாலும் வந்தார். அவரை ஜெயிக்க வேண்டும் என்று முயற்சித்து முயற்சித்து இந்த இடத்தில் இருக்கிறேன். அந்த நடிகர் பேர் ஜோசப் விஜய்.. ஆம் அது நான்தான்” எனக் கூறிய விஜய்யின் பேச்சு ஒட்டுமொத்த அரங்கையும் கவர்ந்து அப்ளாஸ் அள்ளியது.
+ There are no comments
Add yours