`வாரிசு’ இசை வெளியீட்டு விழா தற்போது சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடந்து வருகிறது. இசையமைப்பாளர் தமன், ராஷ்மிகா மந்தானா, இயக்குநர் வம்சி, தயாரிப்பாளர் தில் ராஜு, சரத்குமார், பிரகாஷ் ராஜ், ஷ்யாம் உள்ளிட்ட பிரபலங்கள் பங்கேற்பு. இவர்களுடன் விஜய்யின் பெற்றோர் எஸ்.ஏ.சந்திரசேகர் – ஷோபாவும் வருகை புரிந்துள்ளனர்.
* ரசிகர்களின் கவுன்டவுனுடன் அரங்கில் நுழைந்தார் நடிகர் விஜய். விழா அரங்கைச் சுற்றி வந்து ரசிகர்களுக்கு கையசைத்து உற்சாகமூட்டினார். அதைத் தொடர்ந்து விஜய் திரையுலகுக்கு வந்து 30 வருடங்கள் ஆனதைக் கொண்டாடும் வகையில் விழா மேடையில் சிறப்பு இசை நிகழ்வு ஒன்றும் நடத்தப்பட்டது.
* பிக் பாஸ் ராஜுவும், விஜய் டிவி ரம்யாவும் தொகுத்து வழங்கும் இந்த இசை வெளியீட்டு விழாவில் முதல் பாடலாக ஒலித்தது ‘வா தலைவா’ பாடல். பாடகர்கள் சங்கர் மகாதேவன், கார்த்திக், ட்ரம்ஸ் சிவமணி, இசையமைப்பாளர் தமன் உள்ளிட்டோர் இணைந்து மேடையில் இந்தப் பாடலைப் பாடினர்.
* வாரிசு படத்தின் கதாசிரியர் ஹரி பேசுகையில், “‘வாரிசு’ தமிழ்ப்படம்தான். விஜய் போன்ற எளிமையான மனிதரை நான் பார்த்ததே இல்லை!” என்று தெரிவித்தார்.
* படத்தொகுப்பாளர் கே.எல்.பிரவீனிடம், “படத்தில் எந்த காட்சி கூஸ்பம்ப்ஸா இருக்கும்?” என்ற கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு அவர், “படம் Extraordinary! படம் முழுக்கவே அப்படித்தான் இருக்கும்” என்று பதில் கூற அரங்கமே அதிர்ந்தது.
* டேன்ஸ் மாஸ்டர் ஷோபி ‘வாரிசு’ படத்தில் ‘பாப்பா பாப்பா’ என்ற பாடலுக்கு நடனம் அமைத்திருக்கிறார். அவர் மேடையில் பேசுகையில், “‘மாண்புமிகு மாணவன்’ படத்தில் குரூப் டான்ஸராகத் தொடங்கினேன். ‘திருப்பாச்சி’யில் மாஸ்டர் ஆனேன். 19 வருடங்களாக விஜய் சாருக்கு நடனம் அமைத்து வருகிறேன். விஜய் சார் எனக்கு எப்போதுமே ஸ்பெஷல்தான்.” என்றார்.
* சமீபத்திய சென்சேஷன் டான்ஸ் மாஸ்டர் ஜானி மேடையில் பேசுகையில், “பிரபுதேவா மாஸ்டருக்கு நன்றி. தனுஷ் சாருக்கு நன்றி! எல்லா மொழியிலயும் நிறைய ஹீரோக்களோட ஒர்க் பண்ணிருக்கேன். தெலுங்குல பவன் கல்யாணும் கன்னடத்துல புனித் ராஜ்குமாரும் என்னோட ஃபேவரைட். அதுமாதிரி தமிழ் சினிமாவுல விஜய் சார். அவர் அத்தனை கனிவான நல்ல உள்ளம் கொண்டவர்! ‘ரஞ்சிதமே’ பாடலில் 1:27 நிமிஷத்துக்கு சிங்கிள் ஷாட்டில் பிரமாதமாக ஆடியிருக்கிறார் விஜய்!” என்று தெரிவித்தார்.
+ There are no comments
Add yours