நயன்தாராவின் ‘கனெக்ட்’ படத்தை சட்ட விரோதமாக இணையதளங்களில் வெளியிட ஐகோர்ட் தடை | Nayanthara starrer ‘Connect’ banned from illegal release on websites: High Court

Estimated read time 1 min read

சென்னை: நயன்தாரா நடிப்பில் வெளியாகியுள்ள ‘கனெக்ட்’ திரைப்படத்தை சட்டவிரோதமாக இணையதளங்களில் வெளியிடுவதற்கு தடைவிதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இயக்குனர் விக்னேஷ் சிவனின் தயாரிப்பு நிறுவனமான ரௌடி பிக்சர்ஸ் ‘கனெக்ட்’ திரைப்படத்தை தயாரித்துள்ளது. நயன்தாரா, சத்யராஜ், அனுபம் கெர், வினய் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியாகி உள்ள இந்தப் படத்தை அஸ்வின் சரவணன் இயக்கியுள்ளார்.

இந்தப் படத்தை 2634 இணையதளங்களில் சட்டவிரோதமாக வெளியிடுவதை தடுக்கக் கோரி விக்னேஷ் சிவனின் ரௌடி பிக்சர்ஸ் நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இந்த வழக்கு நீதிபதி சி.சரவணன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது படத் தயாரிப்பு நிறுவனம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் விஜயன் சுப்ரமணியன், “நேற்று திரைக்கு வந்த இந்த திரைப்படத்தை திருட்டுத்தனமாக இணையதளங்களில் வெளியிட்டால் பெருத்த நஷ்டம் ஏற்படும். திரைத் துறையினரின் வாழ்க்கை பாதிக்கப்படும். எனவே சட்டவிரோதமாக இணையதளங்களில் வெளியிட தடை விதிக்க வேண்டும்” என்று வாதிட்டார்.

இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி, ‘கனெக்ட்’ படத்தை சட்டவிரோதமாக இணையதளங்களில் வெளியிட தடை விதித்து உத்தரவிட்டுள்ளார்.

Source link

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours