த்ரிஷா நடிக்கும் ‘ராங்கி’ படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது. குறிப்பாக, ட்ரெய்லரில் இடம்பெற்றுள்ள வசனங்கள் கவனம் பெற்றுள்ளன.
‘எங்கேயும் எப்போதும்’, ‘இவன் வேற மாதிரி’ உள்ளிட்ட படங்கிய எம்.சரவணன் இயக்கத்தில் த்ரிஷா நடிக்கும் படம் ‘ராங்கி’. ஏ.ஆர்.முருகதாஸ் கதை எழுதியுள்ள இப்படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது. சி.சத்யா இசையமைத்துள்ள இப்படம் அண்மையில் அதிகம் பேசப்பட்டது. காரணம் படத்திற்கு தணிக்கை குழுவில் 30 காட்சிகள் நீக்கப்பட்டன. இது குறித்து படத்தின் இயக்குநர் சரவணன் கூறுகையில், “இந்தப் படத்தில் நடிகை த்ரிஷா மேக்கப் இல்லாமல் நடித்துள்ளார். சென்சாரில் பல பிரச்சினைகளைச் சந்தித்தோம். வெளிநாட்டுப் பிரச்சனை வருவதால், 30 இடங்களில் கட் மற்றும் மியூட் செய்யப்பட்டது. இருந்தாலும் அது கதையை எங்கும் பாதிக்கவில்லை” என்றார். இந்நிலையில் இப்படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது.
+ There are no comments
Add yours