`பாக்கியலட்சுமி’ சீரியலை விட்டுட்டு போகிற ஐடியா எனக்கு இல்ல. அதனாலேயே எல்லா வாய்ப்புகளையும் தவிர்த்தேன். `செல்லம்மா’ தொடர் வாய்ப்பு வந்தப்ப ஜெனிக்கும், மேகாவுக்கும் என்ன வித்தியாசம் காட்ட முடியும் அது நம்ம கண்டிப்பா பண்ணனும்னு நினைச்சேன். அதை நிச்சயம் பண்ணேன்னு நினைக்கிறேன்.
சோசியல் மீடியா பேஜ்ல நான் பண்ணின லைவ் -லயே அந்தக் காரணத்தை வெளிப்படையா சொல்லியிருப்பேன். அடுத்த புராஜக்ட்டில் பிரச்னை ஆகலாம், யாராவது உன்னை மிரட்டலாம் எதுக்கும் நீ பர்சனல் காரணம்னு சொல்லுன்னு சொன்னாங்க. என்னோட ஒர்க்ல இடையூறு இருந்த மாதிரி இருந்தது. என்னை நடிக்க விடாத மாதிரி இருந்தது. ஒர்க் பண்ண நிம்மதியான சூழலாகவே இல்ல. காலையில் இருந்து நைட் வரை செட்ல தான் இருப்போம். ஒர்க் பண்ற எல்லா சீனும் அவங்க கூட தான் போயிட்டு இருந்தது. வெளியில போகிறதுக்கு முன்னாடி என்னால எவ்வளவு சரி பண்ண முடியுமோ சரி பண்ண டிரை பண்ணினேன். ஆனா, என்னால முடியல. இது ஒர்க்அவுட் ஆகாது. நாமளாகத்தான் வெளியில வரணுமோன்னு வெளில வந்தேன். என் ஒர்க்ல இடையூறு இருந்ததால மட்டும்தான் வெளியில் வந்தேன். எனக்கு அது ரொம்ப மென்டல் பிரஷர் ஆக இருந்தது.
+ There are no comments
Add yours