NH சர்வீஸ் சாலையில் அடுத்தடுத்து நடந்த விபத்துக்கள்..! நடவடிக்கைக்கு காத்திருக்கும் பொதுமக்கள்.!!

Estimated read time 1 min read

சேலம்:

சேலம் மாவட்டம் கன்னியாகுமரி ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையில் இருந்து இரும்பாலை பிரிவு சாலையில் வேகத்தடை மற்றும் சாலையோர தெரு விளக்கு எதுவும் இல்லை என்பதால் அப்பகுதி மற்றும் அவ்வழியாக செல்லும் பொதுமக்கள் அச்சத்துடனே செல்வது தெரியவந்துள்ளது. அது மட்டுமல்லாமல் தேசிய நெடுஞ்சாலை பாலத்துக்கு அடியில் மது அருந்துவதும், சீட்டு கட்டு போன்ற சூதாட்டங்கள் விளையாடுவதும் மற்றும் இரவு நேரங்களில் சமூகவிரோத செயல்களும் அதிகமாகி வருகின்றது என்று கூறுகின்றனர்.

மேலும் NH பாலம் அடியில் சுகாதாரமற்ற முறையில் காட்சியளிக்கிறது. இச்சாலையில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் என பல ஊர் மக்களும் பள்ளி மாணவ மாணவிகளும் பயணம் செய்து வருகின்றனர்.

அப்பகுதி பொதுமக்கள் கூறுகையில்:

அடுத்தடுத்த விபத்தை தடுப்பதற்காக நாங்கள் வேகத்தடை மற்றும் தெருவிளக்குகளையும் அமைத்து தருமாறு பல அதிகாரிகளிடமும் முறையிட்டோம், அதற்கு எந்த ஒரு பலனும் தற்பொழுது வரை இல்லை. அலட்சியத்தால் இன்னும் பல விபத்துக்கள் நடந்து கொண்டே தான் இருக்கும் எனவும் கூறுகின்றனர். சம்மந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க அப்பகுதி மக்கள் மற்றும் நமது கோரிக்கையும். பெரிய விபத்து நடப்பதற்குள் தடுக்க முயற்சிப்போம்.

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours