CMC Vellore Ragging: “வேலூர் சி.எம்.சி.மருத்து­வக்கல்லூரியில் ராக்­கிங் நடை­பெ­ற­வில்லை”

Estimated read time 1 min read

வேலூர்:

வேலூர் சி.எம்.சி.மருத்து­வக் கல்லூரியில் ராக்­கிங் நடை­பெ­ற­வில்லை என மருத்து­வ­மனை இயக்­குநர் மறுப்பு தெரிவித்துள்­ளார். வேலூர் சி.எம்.சி. மருத்­து­வ­மனை இயக்­குநர் விக்­ரம் மேத்யூ இன்று நிரு­பர்­க­ளுக்கு பேட்டி அளித்­தார்.

அப்­போது அவர் கூறிய­தாவது:–

வேலூர் சி.எம்.சி. மருத்­து­வக் கல்லூரியில் ‘ராக்­கிங்’ நடை­பெ­ற­வில்லை. யாரோ ஒரு­வர் கடி­தம் அனுப்பியுள்­ளார். ராக்­கிங் நடை­பெற்­ற­தாக யாரும் புகார் தரவில்லை. இருந்­தாலும் கல்லூரி நிர்­வா­கம் ஏழுபேரை சஸ்­பெண்ட்செய்­துள்­ளது என்­றார்.

அவர் மேலும் கூறிய­தா­வது:–

சி.எம்.சி. மருத்து­வமனை தொடங்கி 100 ஆண்­டுகளை கடந்துவிட்­டது. உலகம் முழு­வ­தும் இருந்து ஏரா­ளமான நோயா­ளிகள் வந்து சிகிச்சை பெற்று குணம­டைந்து செல்கின்­ற­னர். தற்­போது வேலூரிலிருந்து 18 கி.மீ. தொலை­வில் ராணிப்­பேட்டை மாவட்­டத்­தில் உள்ள கனிகா­புரத்தில் புதிய கட்­டிடம் கட்­டப்­பட்டு அங்கு மருத்து­வ­மனை மாற்­றப்­பட்­டுள்­ளது. இங்கு இதய நோய் பிரிவு, நரம்பியல் பிரிவு உள்ளிட்ட 13 துறைகள் மாற்­றப்­பட்­டுள்­ளன. எனவே வேலூரில் உள்ள சி.எம்.சி. மருத்து­வ­மனை­யில் இதய நோய்க்கு சிகிச்சை அளிக்­கப்­ப­டமாட்டது என்ற தேவை­யற்ற வதந்தி பரவி வருகி­றது. அது உண்மை அல்ல. அங்கு 13 துறைகள் மற்­றப்­பட்­டா­லும், வேலூரில் அனைத்து அவ­சர சிகிச்­சை­களும் அளிக்­கப்­படும்.

அறுவை சிகிச்சை உள்­ளிட்­டவை தேவைப்­ப­டும் பட்­சத்தில் ஆம்புலன்ஸ் மூலம் டாக்­டர் உத­வியுடன் கனிகா­புரத்திற்கு நோயாளி அனுப்பி வைக்­கப்­ப­டு­வர். வேலூரில் உள்ள சி.எம்.சி. மருத்து­வ­மனை கட்­டிடம் 100 ஆண்டு பழைமை வாய்ந்­தது என்­ப­தால் அதை புதுப்பித்து மீண்டும் முழு அளவில் இங்கு நடத்­தப்­படும். இவ்­வாறு அவர் பேட்டி அளித்­தார்.

-மாவட்ட செய்தியாளர் சுரேஷ்குமார்

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours