ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஊழல் ஒழிப்பு விழிப்புணர்வு வாரம் கடந்த 31ம் தேதி முதல் வரும் 5ம் தேதி வரை கடைபிடிக்கப்படுகிறது. அதன்படி ராணிப்பேட்டை ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு சார்பில் பள்ளி மாணவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சியாக ஊழல் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி ராணிப்பேட்டை அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. பேரணியை ஆட்சியர் தெ.பாஸ்கரபாண்டியன் தலைமை தாங்கி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
பேரணி பள்ளி வளாகத்தில் இருந்து தொடங்கி முத்துக்கடை பஸ் நிலையம் வரை சென்று நிறைவடைந்தது. இந்த பேரணியில் ‘லஞ்சம் கொடுப்பது குற்றம்’ வாங்குவதும் குற்றம்’ உட்பட பல்வேறு விழிப்புணர்வு வாசகங்களின் பதாகைகளை ஏந்திய படி மாணவர்கள் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் ராணிப்பேட்டை மாவட்ட ஊழல் ஒழிப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு துணை போலீஸ் சுப்பிரண்டு கணேசன், இன்ஸ்பெக்டர் விஜயலட்சுமி, பள்ளி தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள் மாணவர்கள் கலந்து கொண்டனர்.
+ There are no comments
Add yours