வேலூர்:
கரையோர மக்களுக்கு வேலூர் மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை..! வேலூர் மாவட்டம் காட்பாடி தாலுகாவில் பொன்னை ஆறு உள்ளது. இதிலிருந்து நீர் பாலாற்றில் கலக்கும். பொன்னை ஆற்றின் தலைமை இடம் ஆந்திர மாநிலம்.
தற்போது தமிழகம், ஆந்திராவில் வடகிழக்கு பருவமழை துவங்கி உள்ளது. ஆந்திரா பகுதியில் இப்போது தொடர் மழை பெய்துவருகிறது.இதன் காரணமாக சித்தூர் மாவட்டம் களவு கொண்டா அணையிலிருக்கு 150 அடி கன அளவு தண்ணீர் திறந்துவிடப்பட்டது.

இதன் காரணமாக வேலூர் மாவட்டம் காட்பாடி தாலுகாவில் உள்ள பொன்னை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட உள்ளது. ஆகவே பொன்னை கரையோர பகுதிகளுக்கு செல்லவேண்டாம் என்று வேலூர் மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.வருவாய்துறை, பொதுப்பணித்துறை, தீயணைப்பு துறையினர் கண்காணித்து வருகின்றனர்.
-மாவட்ட செய்தியாளர் ஆர்.ஜே.சுரேஷ்குமார்
+ There are no comments
Add yours