“நறுவீ மருத்துவமனையில் பெண்களின் ஆரோக்கியம் குறித்து கருத்தரங்கம்..!

Estimated read time 1 min read

வேலூர்:

தொடர் மருத்துவ கல்வி திட்டத்தின் கீழ் வேலூர் நறுவீ மருத்துவமனை மற்றும் இந்திய மருத்துவ சங்கம் வேலூர் கிளை இணைந்து வீரியதைராய்டு நோய்பாதிப்புகள் மற்றும் பெண்களின் ஆரோக்கியம் தலைப்புகளில் நறுவீ மருத்துவமனையில் கருத்தரங்கு நடந்தது. இதில் முன்னணி மருத்துவ நிபுணர்கள் பங்கேற்று கருத்துரை வழங்கினர். நிகழ்ச்சியில் இந்திய மருத்துவ சங்கத்தின் வேலூர் கிளை புரவலரும் நறுவீ மருத்துவமனை தலைவருமான முனைவர் ஜி.வி. சம்பத் கருத்தரங்கு மலரினை வெளியிட்டார். கருத்தரங்கிற்கு வருகை தந்தவர்களை இந்திய மருத்துவ சங்கத்தின் வேலூர் கிளை துணைத் தலைவர் டாக்டர் நிலேஷ் வரவேற்றார். நறுவீ மருத்துவமனை செயல் இயக்குநர் டாக்டர் பால் ஹென்றி நறுவீ மருத்துவமனை வசதிகள் மற்றும் செயல்பாடுகள் பற்றி விளக்கி கூறினார்.

கருத்தரங்கில் வீரியதைராய்டு நோய் பாதிப்புகள் பற்றி நறுவீ மருத்துவமனையின் மருத்துவ சேவைகள் தலைவர் டாக்டர் அரவிந்தன் நாயர், பெண்களின் ஆரோக்கியம் பற்றி மகப்பேறு மருத்துவ நிபுணர் டாக்டர் ஜெயசீலாகாமராஜ் ஆகியோர் கருத்துரை வழங்கினர். முன்னதாக கருத்தரங்கின் நோக்கம் பற்றி இந்திய மருத்துவ சங்கத்தின் வேலூர் கிளை செயலாளர் டாக்டர் தானேஷ்குமார் விளக்கி கூறினார்.

கருத்தரங்கில் இந்திய மருத்துவ சங்கத்தின் முன்னாள் தலைவர் டாக்டர் மதன் மோகன், வேலூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை குழந்தைகள் நல மருத்துவர் டாக்டர் கோமதி, நறுவீ மருத்துவமனை இயக்குநர் டாக்டர் திலிப் மத்தாய், தினேஷ் மருத்துவமனை டாக்டர் மணி இளங்கோ, கீதா மருத்துவமனை டாக்டர் சதீஷ்குமார், பாபா மருத்துவமனை டாக்டர் சபிதாலோகநாதன், சாரதாநாசிங் ஹோம் டாக்டர் சுஜாதா, சங்கரி மருத்துவமனை டாக்டர் முரளி, ஆர்.எம். மெடிக்கல் சென்டர் டாக்டர் ரவிசந்திரன் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட மருத்துவர்கள் மற்றும் நறுவீ மருத்துவமனை தலைமை இயக்குதல் அலுவலர் மணிமாறன், பொதுமேலாளர் நித்தின் சம்பத் ஆகியோர் பங்கேற்றனர். முடிவில் இந்திய மருத்துவ சங்க வேலூர் கிளை பொருளாளர் டாக்டர் திலகவதி நன்றி கூறினார்.

-மாவட்ட செய்தியாளர் சுரேஷ்குமார்.

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours