ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை புதிய மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் விவசாயிகள் குறை தீர்வு நாள் கூட்டம் நடந்தது. மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தலைமை தாங்கினார்.
கூட்டத்தில் விவசாயிகள் பல்வேறு கோரிக்கை களை முன்வைத்தனர்:-
பல்வேறு இடங்களில் நீர் நிலை ஆக்கிரமிப்புகள் அகற்றப்படாமல் உள்ளது. நீர்நிலை ஆக்கிரமிப்புகள் பாகுபாடு இன்றி அகற்றப்பட்டு, இடங்கள் கையகப்படுத்தப்பட்டு வருகிறது, தொடர்ந்து அகற்றும் பணிகள் நடைபெற்று வருகிறது. ஆகவே இதில் எவ்வித பிரச்சனைகளும் இல்லை. இது போன்ற பிரச்சனைகளை விவசாயிகள் மனுக்களாக வழங்கலாம் என்றார்.
தொடர்ந்து விவசாயிகள் பேசியதாவது:-
சீக்கராஜபுரம், வடகால் பொன்னை ஆற்றுக்கால்வாயில் ஆக்கிரம்புகள் உள்ளதால் கடந்த 2 ஆண்டுகளாக பொன்னையாற்றில் தண்ணீர் சென்றும், வடகால் ஏரிக்கு தண்ணீர் வரவில்லை. பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையின் மூலம் விவசாயிகளுக்கு ஆழ்துளை கிணறு அமைத்து மின் இணைப்பு வழங்கும் திட்டத்தில் இதுவரையில் ஆழ்துளை போடப்பட்டு பல விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்கப்பட வில்லை. ராணிப்பேட்டை மாவட்டத்தில் எதிர்வரும் சம்பா பருவத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் எவ்வித அரசியல் தலையிடும் இல்லாமல் விவசாயிகள் பயன்பெறும் வகையில் இருக்க வேண்டும்.
கிராம நிர்வாக அலுவலர்கள் நேரடியாக நெல் கொள்முதல் நிலையங்களை ஆய்வு செய்ய வேண்டும். கடன் சங்கங்களில் விவசாயிகள் 6 மாதத்திற்கான பயிர் கடன்கள் வருகின்றனர்.இதனை ஒரு வருட பயிர் கடன் வழங்கும் நடைமுறையாக செயல்ப டுத்தினால் விவசாயிகளுக்கு பயனுள்ளதாக இருக்கும். விவசாய நிலங்களில் காட்டுப்பன்றிகள் பிரச்சனைகள் விளை பொருட்கள் நாசமாகிறது. இப்பிரச்சினை பல ஆண்டுகளாக இருந்து வருகிறது. காட்டுப் பன்றிகளை சுட அரசு உத்தரவிட்டும், வனத்துறை நடவடிக்கை எடுக்காமல் உள்ளது என்றனர்.
-மாவட்ட செய்தியாளர் ஆர்.ஜே.சுரேஷ்குமார்
+ There are no comments
Add yours