கலர்கலராக பெயிண்ட்டிங் விளம்பரம்; பஸ் தகுதிச் சான்றிதழ் ரத்து..!

Estimated read time 0 min read

கேரளா:

கேரளா பிளாஸ்டர்ஸ் பேருந்தின் தகுதிச் சான்றிதழ் ரத்து செய்யப்பட்டது.

கேரளா பிளாஸ்டர்ஸ் கால்பந்து அணியின் அதிகாரப்பூர்வ அணி பேருந்து மீது மோட்டார் வாகன துறை நடவடிக்கை எடுத்துள்ளது. பேருந்து ஆபத்தான நிலையில் இருந்தது உள்ளிட்ட பல்வேறு விதிமீறல்களை காரணம் காட்டி பேருந்தின் ஃபிட்னஸ் ரத்து செய்யப்பட்டது.

பேருந்தின் பின்பக்க டயரில் பெரிய விரிசல் காணப்பட்டதாகவும், பின்பக்க கண்ணாடி உடைந்ததாகவும் மோட்டார் வாகன அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர். இரண்டு டயர்கள் தேய்ந்து போயுள்ளன. முதலுதவி பெட்டியில் போதிய மருந்துகள் இல்லை என்றும் தகுதி ரத்து அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அனுமதியின்றி விளம்பரம் செய்தமையே இந்த நடவடிக்கைக்கு முக்கிய காரணம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

அனைத்து வகைப் பேருந்துகளிலும் வண்ணக் குறியீடு கட்டாயம் என்ற உயர் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில், மோட்டார் வாகனத் துறை அதிகாரிகள் சனிக்கிழமை பேருந்தை ஆய்வு செய்து பேருந்து உரிமையாளருக்குக் காரணம் காட்ட நோட்டீஸ் வழங்கினர். போட்டி முடிந்து வீரர்களை விட்டு சென்ற பிறகு பேருந்தை வழங்க வேண்டும் என்பது ஆர்டிஓ கொடுத்த உத்தரவாகும்.

ஆனால், பேருந்து தரப்படாததால், அதிகாரிகள் வந்து விரிவான ஆய்வுக்கு உட்படுத்தினர். இப்பிரச்னைகள் சரி செய்யப்பட்டு ஆய்வுக்கு பின், பேருந்து மீண்டும் இயக்க அனுமதிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours