வாலாஜாபேட்டை மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் “உலக காயத் தின விழா” நடைபெற்றது..!

Estimated read time 1 min read

வாலாஜா:

“உலக காயத் தின விழா” 
வாலாஜாபேட்டை மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் உலக காயத் தின விழா நிகழ்ச்சி நடைபெற்றது நிகழ்ச்சிக்கு மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் உஷா நந்தினி வரவேற்புரை ஆற்றினார். தமிழ்நாடு விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவு மருத்துவர் சிங்காரவேலு, உலக காயத் தின விழா திட்ட விளக்கினை குறித்து விவரித்தார் மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இணை இயக்குனரும் மருத்துவருமான லட்சுமணன், உலக காயத் தின விழா சிறப்புரையாற்றினார்.
நிகழ்ச்சிக்கு வாலாஜா நகர மன்ற தலைவர் ஹரிணி தில்லை, வாலாஜா நகர மன்ற துணைத் தலைவர் கமல் ராகவன்  நகர மன்ற உறுப்பினர் என்.டி.சிணிவாசன், தொழிலதிபர் குலோப்டைல்ஸ் அக்பர் ஷரீஃப், ஆகியோர் முன்னிலை வகித்தனர் இந்நிகழ்ச்சிக்கு தலைமை ஏற்று மாவட்ட ஆட்சித் தலைவர் தெ.பாஸ்கர பாண்டியன் பேசுகையில் சாலை விதிகளை பின்பற்ற வேண்டும் கட்டாயம் தலைக்கவசம் அணிந்து பயணம் செய்ய வேண்டும் மது அருந்திய பின் வாகனங்கள் ஓட்டுவதையும் செல்போன் பேசியபடி வாகனம் ஓட்டுவதையும் தவிர்க்க வேண்டும் இரவு நேரங்களில் பயணம் செய்வதை தவிர்க்க வேண்டும் என்றும் பேருந்தில் படிக்கட்டுகளில் பயணம் செய்வதை தவிர்க்க வேண்டும் என்றும் கடந்த ஓராண்டில் மட்டும் சாலை விபத்துக்குள்ளான சுமார் 1.50 லட்சம் பேர் உயிரிழந்தனர் சுமார் 3.5 லட்சம் பேர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
விபத்து ஏற்பட்டால் விபத்து ஏற்பட்ட இடத்தில் செய்ய வேண்டிய முதலுதவிகள் மற்றும் உயிர்காக்கும் சிகிச்சைகள் குறித்து விழிப்புணர்வு குறுநாடகம் ஸ்கட்டர் மெமோரியல் மருத்துவமனை மாணவியர்களால் நடத்திக் காட்டப்பட்டது. இந்நிகழ்ச்சியில் விபத்து ஏற்பட்டால் உடனடியாக 108 அவசர ஊர்த்தியை இலவசமாக அழைக்க வேண்டும் என்றும் அவசர ஊர்த்தி வரும் வரை பாதிக்கப்பட்ட நபருக்கு ரத்தப் போக்கினை அழுத்தம் கொடுத்து கட்டுப்படுத்துதல், இறுக்கமாக ஆடைகளை தளர்த்தி சுவாசத்தை சீராக்குதல் தேவைப்பட்டால் அடிப்படை உயிாக்கும் சிகிச்சையான பக்கவாட்டத்தில் படுக்க வைத்தல் சிபிஆர்(CPR) என்ற சொல்லப்படுகின்ற இதயம் மற்றும் நுரையீரல் செயல்பட செய்கின்ற சிகிச்சை குறித்தும் விளக்கி கூறினார்.
அப்துல் அஹீம் கல்லூரி மாணவர்கள் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்களும் செய்முறை விளக்கப் பயிற்சி அளிக்கப்பட்டது உலக காயத்தின் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர் சாலை விபத்துக்கள் குறித்து 94 99 96 61 78 என்ற எண்ணுக்கு தொடர்பு கொண்டு விபத்து குறித்து முன்கூட்டியே வாலாஜா தலைமை மருத்துவமனைக்கு தகவல் கொடுக்கலாம் முடிவில் மருத்துவர் கீர்த்தி நன்றி கூறினார்.

                                                        – R.J.Suresh Kumar

 

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours