ரோட்டில் மீன் பிடிப்பதும், வண்டி கழுவுவதும் வேடிக்கைதான்..! வீடு கடைகளுக்குள்ளேயும் மீன் பிடிப்பது அதைவிட வேடிக்கையே..?

Estimated read time 0 min read

சேலம்:

சேலம் மாவட்டம் தாரமங்கலம் பகுதியில் சுமார் மூன்று நாட்களாக வீடு, கடைகள், சைக்கிள் ஸ்டாண்ட் மற்றும் சாலைகளில் புகுந்த தண்ணீரால் மக்கள் அவலம்.

சில வருடங்களாக காவேரி நீரை ஏரியில் சேர்க்கும் திட்டத்தின் கீழ் நடைபெற்ற வேலைகள் ஆட்சி மாற்றத்தின் காரணத்தினால் முடிவடையாத இருப்பதாகவும், இந்த மழைக்காலங்களில் காவேரி ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும் நிலையில் தண்ணீர் தேங்கிய நிற்பதாகவும், தண்ணீரை வெளியேற்ற வடிகால் இல்லாத நிலைதான் இதற்கு காரணம் எனவும் கூறுகின்றனர்.

தற்போது தண்ணீரின் வேகம் இருக்கும் நிலை சாலையில் போக்குவரத்து நெரிசலும், அவ்வழியே பள்ளி மாணவர்கள் கடந்து செல்லும் பாதையாகவும் இருக்கும் நிலையில் இன்று வரை எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பதே வேதனை அளிக்கிறது.

பகுதிகளில் உள்ள மாணவர்கள் வேலைக்கு செல்பவர்கள் அனைவருமே சில சிரமத்திற்கு உள்ளாகி இருப்பது தெரியவந்துள்ளது.

ஒரு சிலர் சாலையில் வருகின்ற காவேரி தண்ணீரில் மீன் பிடித்து செல்வதும், வாகனங்களை கழுவுவதும், தண்ணீரை வேடிக்கை பார்க்க வந்த ஒரு சில கூட்டங்களும் கூடின.

அதேசமயம், தண்ணீர் புகுந்த வீடுகளில் உள்ள மக்கள் அனைவருமே வெளியேறியது குறிப்பிடத்தக்கது. நடவடிக்கை எடுக்கப்படுமா என காத்திருக்கும் அப்பகுதி மக்கள் மற்றும் நமது எதிர்பார்ப்புமே..!

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours