நாமக்கல் மாவட்டத்தில் சில இடங்களில் 108 ஆம்புலன்ஸ் சேவைகளை இரவு நேரத்தில் இயக்குவது நிறுத்தம்..! தமிழக மக்கள் தன்னுரிமைக் கட்சி கோரிக்கை..!!

Estimated read time 1 min read

நாமக்கல்:

நாமக்கல் மாவட்டத்தில் சில இடங்களில் 108 ஆம்புலன்ஸ் சேவைகளை இரவு நேரத்தில் இயக்குவது நிறுத்தம்:
உடனடியாக 108 ஆம்புலன்ஸ் சேவையை இயக்கிட
தமிழக மக்கள் தன்னுரிமைக் கட்சி கோரிக்கை.

விபத்தில் பாதிக்கப்படும் பொதுமக்களுக்கும், பிரசவத்திற்காக
கர்ப்பிணிகள் மற்றும் உயிர்காக்க போராடும் நோயாளிகளுக்கும், அவசர காலத்தில் பெரிதும் உதவியாக இருப்பது 108 ஆம்புலன்ஸ் திட்டமாகும்.

GVK EMRI – என்ற தனியார் நிறுவனம் 108 சேவையை நேரடியாக நடத்துகின்றது. (உயிர்காக்கும் இச்சேவை பணியை அரசே ஏற்று நடத்தாமல் தனியார் நிறுவனம் நடத்துவது வேதனையானது)

இந்த தனியார் நிறுவனம் நாமக்கல் மாவட்டத்தில்
நாமகிரிப்பேட்டை -TN20G2462 ,
குமாரமங்கலம் -TN20G2399 ,
எர்ணாபுரம் – TN20G2246 ,
வளையப்பட்டி -TN20G3549
இராசிபுரம் -TN20G2676 , திருச்சங்கோடு -TN20G1857,
சேந்தமங்கலம் – TN20G2927
ஆகிய 108 ஆம்புலன்ஸ்களை இரவு நேரங்களில் இயக்காமல் 108 ஆம்புலன்ஸ் சேவைகான முடக்கத்தை ஏற்படுத்தி பொதுமக்களின் உயிருக்கு உலை வைக்கும் சதி திட்டத்தில் , GVK EMRI அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றார்கள். பொதுமக்களின் உயிரோடு விளையாடும் இந்த நிறுவனத்தின் அதிகாரிகளின் செயலை தமிழக மக்கள் தன்னுரிமைக்கட்சி வன்மையாக கண்டிக்கின்றது.

கிராமப் பகுதிகளையும் மலை சார்ந்த பகுதிகளையும்
கொண்டுள்ள நமது மாவட்ட மக்களுக்கு இரவு நேர 108 ஆம்புலன்ஸ் சேவை மிகவும் அவசியமானது என்ற நிலையில் நாமக்கல் மாவட்ட அரசு நிர்வாகம் இதனை கண்டும் காணாமல் இருப்பது நியாயமானது அல்ல.

பொதுமக்களின் உயிர் காக்கும் பெரும் பங்கு வகிக்கும் மேற்படி முடக்கப்பட்டுள்ள 108 ஆம்புலன்ஸ் சேவையை தங்கு தடையின்றி “இரவு நேரங்களிலும்” இயக்கிட தமிழக மக்கள் தன்னுரிமைக்கட்சியின் சார்பில்வலியுறுத்தி கேட்டுக்கொள்கின்றோம்.

இப்படிக்கு,
நல்வினை செல்வன், நிறுவனர்/ தலைவர், தமிழக மக்கள் தன்னுரிமைக்கட்சி.

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours