சேலம்:
சேலம் மாவட்டம் தாரமங்கலத்தில் இருந்து இரும்பாலை வழியாக சேலம் செல்லும் சாலையில் சமீப காலமாக மழையின் தாக்கத்தினால் ஏரியில் உள்ள மண்கள் சாலையில் குவிக்கப்பட்டன, இதனால் அடுத்தடுத்த நடந்த விபத்துக்களால் சிலர் சிறுகாயம் அடைந்தனர், படுகாயம் அடைவதை தடுப்பதற்கு இவ்வு முயற்சி. சாலைகளில் எதனால் இவ்வளவு மண்கள் குவிப்பும் மற்றும் போக்குவரத்து நெரிசலும் என்ன காரணமாக இருக்கும் என ஆராய்ந்த போது கிடைத்த சில தகவல்கள் இதோ.
காவேரி ஆற்றின் நீரை ஏரிகளுக்கு கொண்டு வரும் திட்டத்தின் கீழ் நடைபெற்ற வேலைகள் நடந்த போது ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளது, அதன்பின் வேலைகள் அவ்வப்போதே நிறுத்தப்பட்டுள்ளது எனவும் தெரிய வருகிறது.
2022 மழைக்காலங்களில் காவேரி ஆற்றில் நீர் அதிகரித்த காரணத்தினால், முழுமையடையாத வாய்க்கால் வழியாக தாரமங்கலத்தை மூழ்கவும் போக்குவரத்து நெரிசலையும் ஏற்படுத்தியது எனவும் கூறப்படுகிறது. தாரமங்கலம் முழுவதும் தண்ணீர் தேங்கிய பல இடங்களில் நகராட்சி ஊழியர்களின் உதவியோடு தண்ணீரை வெளியேற்ற சாலை ஓரங்களில் உள்ள மண்களை அப்புறப்படுத்தி சாலையில் மேல் குவிய பட்டுள்ளது எனவும் தெரியப்படுகிறது. மேலும் இதனால் விபத்துகளும் போக்குவரத்து நெரிசலும் ஒரு வார காலமாக தொடர்ந்து நடப்பதே வேதனையாக இருக்கிறது எனவும் பொதுமக்கள் கூறுகின்றனர். மேலும், பெரும் விபத்துக்களை தடுப்பதற்கு சாலைகளில் குவிக்கப்பட்டுள்ள மண்களை அகற்றினாலே போதும் என்று மக்கள் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறார்கள்.
ஆகஸ்ட் 8ஆம் தேதி கே.ஆர்.தோப்பூரை சேர்ந்த குமார்(சுமார் வயது 40) என்பவர் இரவு 8மணி அளவில் இவ்வழியாக வீடு திரும்பிய போது சாலையில் குவிக்கப்பட்ட மண்ணினால் விபத்தில் திடீர் மரணம் அடைந்தார், இதைத்தொடர்ந்து செப்டம்பர் 16ஆம் தேதி முதியோர்கள் வேலை முடிந்து வீடு திரும்பிய போது அடுத்தடுத்து இரண்டு வாகனங்களும் உன்னின் மேல் மோதி கடுகாயம் அடைந்து சிகிச்சைக்கு உட்பட்டனர் என்பதே சான்று ஆகும். சம்பந்தப்பட்ட அதிகாரிகளால் நடவடிக்கை எடுக்கப்படுமா?! என்ற கேள்விக்குறி அப்பகுதி மக்களுக்கு எழுந்துள்ளது.
+ There are no comments
Add yours