பேரறிஞர் அண்ணாவின் 114-வது பிறந்தநாள் விழா – தாரமங்கலத்தில் அதிமுகவினர் கொண்டாட்டம்..!

Estimated read time 1 min read

சேலம்:

சேலம் மாவட்டம் தாரமங்கலம் பகுதியில் அதிமுக சார்பில் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி அண்ணா பிறந்தநாள் விழா பிரம்மாண்டமாக கொண்டாடப்பட்டது.

 

இன்று காலை 10 மணியளவில் தாரமங்கலம் அறிஞர் அண்ணா உருவ சிலைக்கு மாலைகள் அணிவித்து, மலர்கள் தூவி மரியாதை செலுத்தியவாறு தொடங்கப்பட்ட இவ்விழாவில் மாநில அவை உறுப்பினர் – மேட்டூர் நகர கழகச் செயலாளர் N. சந்தரசேகர், சங்ககிரி சட்டமன்ற உறுப்பினர் S. சுந்தரராஜன், ஓமலூர் சட்டமன்ற உறுப்பினரும் – அம்மா பேரவை மாவட்ட செயலாளர் R.மணி, ஏற்காடு சட்டமன்ற உறுப்பினர் G. சித்ரா, வீரபாண்டி சட்டமன்ற உறுப்பினர் M.இராஜமுத்து, சங்ககிரி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் S. ராஜா, ஓமலூர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பால்பக்கிக்கிருஷ்ணன், தாரமங்கலம் தெற்கு ஒன்றியம் சின்னுசாமி, தாரமங்கலம் கிழக்கு ஒன்றியம் மணிமுத்து, தாரமங்கலம் நகர கழக செயலாளர் பாலசுப்பிரமணியம், நன்றி உரை – தாரமங்கலம் நகர கழக அவைத்தலைவர் S.P. கோவிந்தராஜு மற்றும் பல தொண்டர்கள் கலந்து கொண்டாடினர்.

புகைப்படம்: ஈழம் சுரேஷ் – அறம் செய் மீடியா 

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours