கள்ளக்குறிச்சி கலவரம்: எச்சரித்த உளவுத்துறை! கண்டுக்காத அதிகாரிகள்.! பகீர் பின்னணி.!

Estimated read time 1 min read

கள்ளக்குறிச்சி:

Kallakurichi: கள்ளக்குறிச்சியில் மிகப்பெரிய கலவரம் ஏற்படும் வாய்ப்புள்ளதாக இரண்டு நாட்களுக்கு முன்பாகவே மாநில உளவுத்துறை எச்சரித்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

Kallakurichi: கள்ளக்குறிச்சியில் உள்ள தனியார் பள்ளியில் கடந்த வாரம் 12 ஆம் வகுப்பு படிக்கும் மாணவி மர்மமான முறையில் இறந்ததாக செய்திகள் வெளியானது.  பள்ளியின் மூன்றாவது மாடியில் இருந்து மாணவி குதித்து தற்கொலை செய்து கொண்டதாக பள்ளியின் தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டது. தங்களது மகளின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக அவரது பெற்றோர் புகார் அளித்து இருந்தனர். இதனை தொடர்ந்து பள்ளியின் முன்பு அவர்கள் போராட்டத்திலும் ஈடுபட்டவர். இந்த போராட்டம் கலவரமாக மாறி கல்வீச்சு தாக்குதல்கள் ஏற்பட்டது. இந்த போராட்டம் வலு எடுத்து கலவரமாக மாறியது. பள்ளியில் வகுப்பறைகள், பேருந்துகள் மற்றும் காவல் துறை வாகனங்கள் அனைத்தும் தீ வைத்து கொளுத்தப்பட்டது.

பின்பு காவல்துறையினர் துப்பாக்கி சூடு நடத்தியும், தடியடி நடத்தியும் போராட்டக்காரர்களை கலைத்தனர். இந்த சம்பவம் தமிழகத்தில் மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. தமிழகத்தில் உள்ள மூத்த தலைவர்கள் மற்றும் எதிர்க்கட்சியினர் இதற்கு கடும் கண்டனத்தை தெரிவித்து இருந்தனர். இதனை தொடர்ந்து பள்ளியின் முக்கிய பொறுப்பாளர்களை காவல்துறை கைது செய்து சிறையில் அடைத்தது.  இந்த வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரணை செய்வார்கள் என்று டிஜிபி சைலேந்திரபாபு அறிவித்து இருந்தார்.  நேற்று சாராய பாக்கெட்டுகளை வைத்து தான் பள்ளிக்கு தீ வைக்கப்பட்டது என்று விசாரணையில் தெரிய வந்திருந்தது.  பின்பு போராட்டத்தில் ஈடுபட்டவர்களாக 250க்கும் மேற்பட்டோரை காவல்துறையினர் கைது செய்திருந்தனர்.

சிபிசிஐடி போலீசார் மாணவியின் மரணம் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் கள்ளக்குறிச்சி மாவட்ட எஸ்பி மற்றும் கலெக்டர் இடமாற்றம் செய்யப்பட்டனர். தமிழக உளவுத்துறை ஐஜியும் இடமாற்றம் செய்யப்பட்டு புதிய ஐஜியாக செந்தில்வேலன் ஐபிஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.  இந்நிலையில் கள்ளக்குறிச்சியில் கலவரம் ஏற்படும் என்று இரண்டு நாட்களுக்கு முன்பே மாநில உளவுதுறை எச்சரித்ததாகவும், இதனை அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் மெத்தன போக்காக இருந்ததே இந்த கலவரத்திற்கு முக்கிய காரணமாக அமைந்தது எனது தகவல்கள் வெளியாகி உள்ளது. இதனை தொடர்ந்து தான் ஐஜி, எஸ்பி மற்றும் கலெக்டர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இரண்டாவது முறையாக மாணவிக்கு உடல் கூறாய்வு நடைபெற்ற பின்பும் மாணவியின் உடலை வாங்க பெற்றோர் மறுப்பு தெரிவித்து வருகின்றனர்.  மாணவியின் உடலை பெற்றுக் கொள்ளுமாறு அவர்களது வீட்டில் நோட்டீசும் ஒட்டப்பட்டுள்ளது.

-RK Spark

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours