நாகர்கோவில்:
நாகர்கோவில் இளம்பெண் அளித்த பாலியல் புகார் மீதான விசாரணை கடந்த 18-ந் தேதி முதல் நாகர்கோவில் மகிளா கோர்ட்டில் நடத்து வந்தது. விசாரணையில் காசி மற்றும் அவரது தந்தை தங்கபாண்டியன் நேரில் ஆஜராகினர்.
தொடர்ந்து 4-வது நாளாக இன்று காசி மற்றும் தங்கபாண்டியனை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். மேலும் முக்கிய சாட்சியான இளம்பெண்ணிடம் நீதிபதி சசிரேகா விசாரணை நடத்தினார்.
கடந்த 4 நாட்களில் இதுவரை 10-க்கும் மேற்பட்ட சாட்சியங்கள் நேரில் வந்து வாக்குமூலம் அளித்துள்ளனர். இதனைத்தொடர்ந்து காசி மற்றும் தங்கபாண்டியனிடம் விசாரணை நடத்தப்பட்டது. பின்னர் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் காசி மற்றும் தங்க பாண்டியன் மீண்டும் பாளையங்கோட்டை சிறைக்கு கொண்டு செல்லப்பட்டு அடைக்கப்பட்டனர்.
-R Mohan
+ There are no comments
Add yours