தமிழகத்தில் குரங்கம்மை தொற்று கண்டறியும் ஆய்வகம் எப்போது அமையும்.?

Estimated read time 1 min read

சென்னை:

Monkeypox Precaution in Tamil Nadu: தமிழகத்தில் குரங்கம்மை நோய் தொடர்பான நடவடிக்கைகள் பற்றி மக்கள் நல்வாழ்வுதுறை அமைச்சர் மா.சுப்ரமணியன் தகவல்… தமிழகத்தில் குரங்கம்மை தொற்று கண்டறியும் பிரத்யேக ஆய்வகம் அமைக்கப்படும் என தகவல்.

சென்னை: இந்தியாவில் ஆங்கொன்றும் இங்கொன்றுமாக குரங்கு காய்ச்சல் பாதிப்புகள் வெளிவந்த நிலையில், அண்டை மாநிலமான கேரளாவில் இரண்டாவதாக ஒருவருக்கு குரங்கு அம்மை தொற்று உறுதியாகியுள்ளது தமிழகத்தில் கவலைகளை ஏற்படுத்தியுள்ளது. கேரளாவின் கன்னூர் மாவட்டத்தில் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது, அவர் துபாயில் இருந்து திரும்பியதாக தகவல்கள் கிடைத்துள்ளன. அதையடுத்து, தமிழகத்தில் குரங்கம்மை நோய் தொடர்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பற்றி மக்கள் நல்வாழ்வுதுறை அமைச்சர் மா.சுப்ரமணியன் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

கோவை விமான நிலையத்தில், குரங்கு அம்மை குறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மா சுப்பிரமணியன், குரங்கம்மை தாக்கம் உள்ள 63 வெளிநாடுகளிலிருந்து தமிழகத்தில் இருக்கும் பன்னாட்டு விமானங்களுக்கு வருபவர்கள் தீவிரமாக கண்காணிக்கிறோம்.

குரங்கு அம்மை தடுப்பு பணிகள் குறித்து கோவை விமான நிலையத்தில் ஆய்வு செய்யப்பட்டது, வெளிநாட்டில் இருந்து கோவைக்கு தினசரி இரு விமானங்கள வருகின்றன, அதில், நாள்தோறும் 170 பயணிகள் வரை வருகின்றனர். அவர்களுக்கு 2 சதவீதம் ரேன்டமாக சோதனை நடத்தப்படுகின்றது. இதுவரை ஓருவக்கு கூட கொரொனா அல்லது குரங்கு அம்மை நோய் இருப்பது கண்டறியப்படவில்லை.

விமான நிலையத்தில் ஆர்டிபிசிஆர் மையம் ஒன்றும் படுக்கை அறையும் தயாராக இருப்பதாக அமைச்சர் தெரிவித்தார். கோவை ,மதுரை ,திருச்சி சென்னை அரசு மருத்துவமனைகளில்  பிரத்யோகமாக 10 படுக்கைகளுடன் கூடிய குரங்கு அம்மை  வார்டு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் கோவை அரசு மருத்துவமனையில்  நாளை முதல் குரங்கு அம்மை வார்டு செயல்பட துவங்கும்  என்றும் தெரிவித்தார்.

மேலும் ஐசிஎம்ஆர்  மூலம் குரங்கு அம்மை தொற்றைக் கண்டறிய நடவடிக்கைகள் எடுத்துவரும் மத்திய அரசு, 15 ஆய்வகங்களை நிறுவ ஊள்ளதாகவும், இதில் ஒன்று தமிழகத்தில் அமைக்கவேண்டும் என்று கேட்டுள்ளதாகவும், அந்த ஆய்வகம் கிங் இன்ஸ்டியுட்டில் அமைக்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

கேரளா தமிழகம் இடையிலான நெடுஞ்சாலைகளில் 13 இடங்களில் குரங்கு அம்மை பாதிக்கப்பட்டவர்களை கண்காணிக்கும் பணியில் பொது சுகாதாதத்துறையினர் ஈடுபட்டு வருவதாக குறிப்பிட்ட அமைச்சர், குரங்கு அம்மை பாதிப்புகளை ஆட்சியர் தொடர்ந்து  கண்காணித்து வருவதாகவும் முகம், முழங்கை பகுதிகளில் கொப்புளம் இருந்தால் அவர்களை தீவிரமாக கண்காணிப்பதாகவும் தெரிவித்தார்.

தற்போது மீண்டும் கொரொனா பாதிப்பு துவங்கி இருக்கும் நிலையில், முகக்கவசம், சானிட்டைசர் பயன்பாட்டை அதிகரிக்க அறிவுறுத்தி இருப்பதாகவும், முதல் தவணை தடுப்பூசி 96 சதவீதமும், இரண்டாவது தவணை 86 சதவீதமும் போடப்பட்டுள்ளதாகவும், பூஸ்டர் தடுப்பூசி போடும் பணிகள் துரித கதியில் நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தார்.

குறிப்பாக வரும் ஞாயிற்றுகிழமை 50 ஆயிரம் இடங்களில் மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார். ஆயுஷ்மான் பாரத் பணிகளில் தொய்வு என்ற மத்திய நிதி் இணையமைச்சரின் குற்றச்சாட்டில் தெளிவில்லை.எனவும், இது குறித்து எதில் சரி செய்ய வேண்டும் என சுட்டிக்காட்டினால் அதை சரி செய்ய தயார் எனவும் அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்தார்.

துறை சார்ந்தவர்கள் ஆயுஷ்மான் பாரத் விஷயத்தில் தமிழகத்தை, பாராட்டி இருக்கும் நிலையில் மத்திய நிதி் இணையமைச்சர், தெரியாமல் சொல்லி இருப்பார் எனவும் தெரிவித்தார். மக்களின் வீடுகளுக்கே தேடி சென்று மருத்துவம் அளிக்கப்பட்டு வருவதாகவும் . கடைகோடி மனிதனுக்கும் தமிழகத்தில் சிகிச்சைகள் கிடைப்பதாகவும் அவர் கூறினார்.

                                                                                                           – Malathi Tamilselvan 

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours