உத்தர பிரதேசம்:
உத்தர பிரதேச மாநிலம் லக்னோவில் 40 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர், தன் மருமகளுடன் ஹோட்டல் நடத்தி வந்துள்ளார். கடந்த 6 நாட்களுக்கு முன் கடைக்கு ஆட்கள் தேவை என்ற விளம்பரத்தை பார்த்து, 21 வயதுடைய இளம்பெண் ஒருவர் வேலை தேடி வந்துள்ளார். இவர்களும் அந்த இளம்பெண்ணை உடனே வேலையில் சேர அனுமதித்தனர். இந்நிலையில் நேற்று இரவு வழக்கம்போல் அந்த பெண் வேலை முடிந்து வீட்டுக்கு புறப்பட்டபோது அந்த பெண்ணை வீட்டில் விடுவதாக காரில் ஏற கூறியுள்ளார் ஹோட்டல் உரிமையாளர். முதலில் அந்த பெண் மறுக்க, பிறகு இரவு நேரம் என்பதால் அவர் காரில் எறியுள்ளார்.
அந்த கார் போய்க்கொண்டிருக்கும்போது, அந்த நபர் இளம்பெண்ணிடம் இரட்டை அர்த்தத்தில் பேசியுள்ளார். பின் பாலியல் சீண்டலில் ஈடுபட முயற்சித்துள்ளார். இதற்கு அந்த இளம்பெண், மறுப்பு தெரிவித்ததோடு மிரட்டியும் உள்ளார். அப்போதும் அந்த நபர் வலுக்கட்டயமாக சீண்டியதால், வேறு வழியின்றி ஓடும் காரில் இருந்து கதவை திறந்து அந்த பெண் குதித்துள்ளார்.ஓடும் காரில் இருந்து குதித்தால், அவருக்கு பலமான காயம் ஏற்பட்டு மயக்கமடைந்தார்.
இதனை பார்த்த பொதுமக்கள், இளம்பெண்ணை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின் தகவலறிந்து மருத்துவமனைக்கு விரைந்த காவல்துறையினர், அந்த பெண்ணிடம் விசாரணை மேற்கொண்டனர். இதனையடுத்து இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் 6 தனிப்படை குழுவை கொண்டு ஹோட்டல் உரிமையாளரை 2 மணி நேரத்தில் கைது செய்தனர். வேலைக்கு வந்த 21 வயது இளம்பெண்ணிடம் ஹோட்டல் உரிமையாளர் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
–
+ There are no comments
Add yours