கர்நாடக உயர்நீதிமன்றத்தின் கதவைத் தட்டிய ட்விட்டர்: மத்திய அரசுக்கு எதிராக வழக்கு.!

Estimated read time 1 min read

கர்நாடக:

மத்திய அரசு அதிகார துஷ்பிரயோகம் செய்ததாக ட்விட்டர் அதிகாரிகள் அரசுக்கு எதிராக, கர்நாடக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.

ட்விட்டரில் தவறான தகவல்கள் அடங்கிய பதிவுகளை நீக்குமாறு இந்திய அரசு உத்தரவிட்டதை தொடர்ந்து, அதை எதிர்த்து  ட்விட்டர்  நிறுவனம் நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்துள்ளது. மத்திய அரசு அதிகார துஷ்பிரயோகம் செய்ததாக ட்விட்டர் அதிகாரிகள் வழக்கு தொடர்ந்துள்ளனர். இதனால் மீண்டும் மத்திய அரசாங்கத்திற்கும் அமெரிக்காவைச் சேர்ந்த சமூக ஊடக நிறுவனமான ட்விட்டருக்கு இடையிலான பதற்றத்தை அதிகரித்துள்ளது.

பல ஆண்டுகளாக,  தவறான தகவல்களை பரப்பு நூற்றுக்கணக்கான கணக்குகள் மற்றும் ட்வீட்களை அகற்றுமாறு ட்விட்டரை அரசாங்கம் தொடர்ந்து கேட்டுக் கொண்டுள்ளது. ஜூலை 4 ஆம் தேதிக்குள் உத்தரவுகளை பின்பற்றாவிட்டால், நடவடிக்கை எடுக்கப்படும் என மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் எச்சரித்தது.

இது தொடர்பாக, ட்விட்டருக்கு ஜூன் 6ம் தேதி நோட்டீஸ் அனுப்பப்பட்டு, ஜூன் 9ம் தேதி மற்றொரு நோட்டீஸ் அனுப்பப்பட்டு போதும்  ட்விட்டர் நிறுவனம் நடவடிக்கை எடுக்கவில்லை. பின்னர் மூன்றாவது முறையாக, ஜூன் 27 திங்கள் அன்று நிறுவனத்தின் தலைமை இணக்க அதிகாரிக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

2021 ஆம் ஆண்டில் விவசாய ஆர்வலர்கள் என்ற பெயரில் விவசாய சட்டங்கள் குறித்த தவறான தகவல்களை பரப்பிய , பாகிஸ்தான் செய்தி நிறுவனங்கள், பத்திரிகையாளர்கள் மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் உட்பட சுமார் 85 ட்விட்டர் கணக்குகள் மற்றும் ட்வீட்களை நீக்குமாறு ட்விட்டரை,  தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் கேட்டுக் கொண்டது.

2000 ஆம் ஆண்டின், தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் கீழ் மேற்கண்ட உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டன. இதற்குப் பதிலளித்து, கடந்த ஆண்டு பிப்ரவரியில், அந்த நிறுவனம் அளித்த அறிக்கையில், ‘எங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ள நடவடிக்கை இந்திய சட்டத்தின்படி, எங்கள் கொள்கைக்கு இணக்கமாக இருப்பதாக நாங்கள் நம்பாததால்,  நாங்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என ட்விட்டர் தெரிவித்தது.

மேலும், பேச்சுரிமை மற்றும் வெளிப்பாட்டை தன்மையை பாதுகாக்க, செய்தி ஊடக நிறுவனங்கள், பத்திரிகையாளர்கள், ஆர்வலர்கள் மற்றும் அரசியல்வாதிகள் அடங்கிய கணக்குகள் மீது நாங்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அவ்வாறு செய்வது இந்தியச் சட்டத்தின் கீழ் கருத்துச் சுதந்திரத்திற்கான அவர்களின் அடிப்படை உரிமையை மீறும் செயலாகும் என்று நாங்கள் நம்புகிறோம் என ட்விட்டர் தெரிவித்திருந்தது.

                                                                                                               – Vidya Gopalakrishnan 

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours