தனியார் பள்ளி வாகனங்கள் ஆய்வு..!

Estimated read time 1 min read

சேலம்:

சேலம் மாவட்டம் ஓமலூர், காடையாம்பட்டி ஆகிய 2 தாலுகாவிற்கும் சேர்த்து ஓமலூர் மோட்டார் வாகன ஆய்வாளர் அலு வலகம் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில், தற்போது பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளதால், பள்ளி பேருந்துகளை அனைத்தையும் ஆய்வு செய்வதற்காக ஓமலூர் மோட்டார் வாகன ஆய்வா ளர் மீனாகுமாரி, பள்ளி பேருந்துகள் சோதனை முகாம் நடத்தினார். இந்த முகாமில் ஓமலூர், காடையாம்பட்டி, தாரமங்கலம், கருப்பூர் ஆகிய வட்டாரத்தில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகளை சேர்ந்த 250 பேருந்துகள் சோதனை செய்யப்பட்டது. பேருந்துகளில் சி. சி. டி. வி கேமரா, ஜி. பி. எஸ் கருவி வைக்கப்பட்டிருப்பதை ஆய்வு செய்தார்.

மேலும், பேருந்து படிகள், மாணவர்கள் அமரும் சீட்டுகள், அவசர கால கதவுகள், முதலுதவி பெட்டிகள், தீ அணைப்பான்கள் ஆகியவற்றை முறையாக ஆய்வுகள் செய்தார். எந்திரத்தின் தன்மை, வாகன இயக்கம், பேருந்தின் தரைதளத்தின் உறுதி தன்மை ஆகியவையும் ஆய்வுகள் செய்யப்பட்டது. அப்போது ஒரு தனியார் பள்ளி பேருந்தின் தரை தளத்தை அழுத்தி பார்க்கும்போது, அவை அனைத்தும் உடைந்து கொட்டியது. மாணவர்கள் சீட்டில் அமரும்போது, தரைதளம் உடைந்தால், மாணவர்களின் உயிருக்கே ஆபத்து ஏற்படும் நிலையில், இருந்தது.

இதையடுத்து அந்த பேருந்து இயக்குவதற்கு தடை விதித்து உத்தரவிடப்பட்டார். அதேபோல பல பேருந்துகளில் மாண வர்களின் இருக்கை பெயர்ந்தும், கிழிந்தும், தூய்மை இல்லாமல், அழுக்குகள் படிந்தும் காணப்பட்டது. அந்த ேபருந்துகளின் இருக்கைகள் மாற்றப்பட்டதை உறுதி செய்த பின்னரே இயக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது. சி. சி. டி. வி கேமரா இல்லாத பேருந்துகளில் உடனடியாக கேமரா வைக்க உத்தரவிடப்பட்டது.

அதேபோல, பள்ளியில் நின்றிருக்கும் பேருந்துகள் பின்னால், மாணவர்கள், குழந்தைகள் இருப்பதை அறிந்துகொள்ளும் வகையில், அனைத்து பேருந்துகளிலும்ரியர் சென்சார் ஒலி எழுப்பும் கேமரா வைக்க உத்தர விடப்பட்டுள்ளது. பேருந்தின் பின்னால் மாணவர்கள் ஒரு அடி தூரத்தில் இருந்தாலும், ஓட்டுனருக்கு எச்சரிக்கை விடுக்கும்ஒலி எழுப்பக்கூ டிய ரியர் வியூ சென்சாரை அனைத்து பேருந்து களிலும்பொருத்திய பின்னரே இயக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த சோதனையில், 15 பேருந்துகளை இயக்க தடைவிதித்து உத்தரவிடப்பட்டது.

                                                                                                                                -Naveenraj

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours