சித்தர் கோயில் வன விரிவாக்க மையத்தில் வனத்துறை அமைச்சர் நேரில் ஆய்வு..!

Estimated read time 1 min read

சேலம்:

சேலம் மாவட்டம், கஞ்சமலை சித்தர் கோயில் பகுதியில் அமைந்துள்ள வன விரிவாக்க மையத்தினை தமிழக வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் நேரில் ஆய்வு மேற்கொண்டார். ஆய்வில் வன பாதுகாப்பு மற்றும் நாற்றங்கால் உற்பத்தி, மூலிகை செடி வளர்ப்பு உள்ளிட்டவை குறித்து கேட்டிருந்தார்.

மேலும், இந்த ஆய்வின் போது முன்னாள் எம்பி செல்வகணபதி, இடங்கணசாலை நகராட்சி தலைவர் கமலக்கண்ணன், துணைத்தலைவர் தளபதி, மாவட்ட தொண்டர் அணி அமைப்பாளர் செல்வம், மகுடஞ்சாவடி ஒன்றிய பொறுப்பாளர் பச்சமுத்து, வீரபாண்டி ஒன்றிய செயலாளர் வெண்ணிலா சேகர், வன பாதுகாவலர் பெரியசாமி, உதவி வன பாதுகாவலர் கண்ணன், வன சரக அலுவலர் நீலமேகம், நகராட்சி கவுன்சிலர்கள் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

                                                                                                                – JAYAKHARAN

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours