சேலம்:
தமிழகத்தின் சுற்றுலாத்தலங்களில் ஏற்காடு முக்கிய பங்கு வகிக்கிறது. கொரோனா காலக்கட்டத்திற்கு பிறகு சுற்றுலாத்தலங்களை நோக்கி படையெடுக்கும் மக்களின் கூட்டம் அதிகரித்திருக்கிறது. அந்த வகையில் ஊட்டி, கொடைக்கானல், ஒக்கேனக்கல், ஏற்காடு போன்ற முக்கிய சுற்றுலாத்தலங்களை நோக்கி வரும் சுற்றுலாப்பயணிகளின் பாதுகாப்பை உறுதிசெய்வதில் தமிழ்நாடு காவல்துறை கவனமாக உள்ளது.
இந்நிலையில் ஏற்காடு மலைப்பாதையில் நேற்று விபத்தில் சிக்கி தந்தை, மகள் பலி ஆனார்கள். இந்த சம்பவத்தை தொடர்ந்து ஏற்காடு மலைப்பகுதியில் பயணம் செல்லும் அனைவருக்கும் ஹெல்மட் கட்டாயம் என்ற அறிவிப்பை சேலம் மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது. விபத்துகள் அதிகம் நடைப்பெறும் வாய்ப்புகள் இருப்பதாலும், மலைப்பகுதியில் மக்களுக்கு கூடுதல் கவனம் தேவை என்பதாலும் மாவட்ட காவல் துறை சார்பில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மேலும் விடுமுறை நாட்களில் கூட்டம் அதிகரிப்பதால் வாகன போக்குவரத்து அதிகமாவதன் காரணமாக விபத்துக்கள் நடக்காமல் இருக்க ஏற்காடு மலைப்பாதையில் செல்வோர் கட்டாயம் தலைக்கவசம் அணிய காவல்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது. அறிவிப்பை மீறி வரும் தலைக்கவசம் அணியாத இரண்டு சக்கர வாகன ஓட்டிகள் திருப்பி அனுப்பி வைக்கப்படுகின்றனர்.
–
+ There are no comments
Add yours