பலாப்பழம் சாப்பிட்டு குளிர்பானம் அருந்திய சிறுவன் மற்றும் தாய் உயிரிழப்பு..!

Estimated read time 1 min read

கடலூர்:

பலாப்பழம் சாப்பிட்ட உடனே குளிர்பானம் அருந்தியதால் ஆறு வயது சிறுவன் உயிரிழந்ததாக வெளியான தகவலை அடுத்து தற்போது சிறுவனின் தாயும் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் மாவட்டம்  புவனகிரி அடுத்த ஆலம்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் வேல்முருகன். இவரது ஆறு வயது மகன் பரணிதரன் நேற்று முன்தினம் உயிரிழந்தார். இது குறித்து நடத்தப்பட்ட விசாரணையில் மதிய உணவு சாப்பிட்ட உடனே வேல்முருகனின் மனைவி மற்றும் குழந்தைகள் இருவர் என மூன்றுபேரும் பலாப்பழம் சாப்பிட்டதாகவும், அதன் தொடர்சியாக குளிர்பானம் அருந்தியதாகவும் கூறப்பட்டது.

இதனால் மயக்கமடைந்த அவர்களை மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளித்து வந்தனர். ஆனால் சிறுவன் பரணிதரன் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் உயிரிழந்தார். இதனை தொடர்ந்து ஒரு பக்கம் போலீஸாரின் விசாரணையும் நடைபெற்று வந்தது. இந்நிலையில் இன்று  வேல்முருகனின் மனைவி பரணியும் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள இந்த சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வந்த போலீஸார் திடுக்கிடும் தகவல் ஒன்றை தெரிவித்துள்ளனர். வேல்முருகன் மனைவி பரணி குடும்ப பிரச்சனை காரணமாக குளிர்பானத்தில் எலி மருந்தை கலந்து குழந்தைகளுக்கும் கொடுத்து அவரும் குடித்துள்ளது தெரிய வந்துள்ளது. இந்த சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

                                                                                                                                – Dayana Rosilin 

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours