கோவை:
Minister nasar Blame Annamalai : நடிகர் வடிவேலு ஒரு படத்தில் கூறுவதைப் போல் “நானும் ரவுடி தான்…நானும் ரவுடிதான்” என அண்ணாமலை சொல்லிக் கொள்கிறார் என்று கிண்டிலத்த பால்வளத்துறை அமைச்சர் நாசர்.
கோவை பால் கம்பெனி பகுதியில் புரனமைக்கப்பட்ட தொழில்நுட்ப ஆவின் பாலகத்தை பால்வளத்துறை அமைச்சர் நாசர் திறந்து வைத்து விற்பனையை துவக்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை அவர் சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது,
‘ஏறக்குறைய 10 ஆண்டுகாலம் ஆவின் பால் உற்பத்தி விற்பனை மூழ்கிப்போகின. முதல்வர் ஆணையை ஏற்று தமிழகம் முழுவதும் ஆவின் பால் உற்பத்தி விற்பனையை அதிகரிக்க வேண்டும் என்ற உத்தரவின் பேரில் வேலை செய்து வருகிறோம். இன்றைய தினம் மூழ்கிய கப்பலை நீர்மூழ்கி கப்பல் ஆக மாற்றி வருகிறோம். மேலும் இன்று விவசாய உற்பத்தியில் மேம்படுத்தவும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. கோவை மாநகரத்தில் இன்று ஒரு கோடி மதிப்புள்ள ஆவின் பாலகத்தை திறந்து வைத்துள்ளோம். ஆவின் பணியிடங்களை பொறுத்தவரை கடந்த காலங்களில் முறைகேடான முறையில் வேலைவாய்ப்பு துறையின் விதிகளை மீறி ஆட்களை நிரப்பும் பணியை மேற்கொண்டது. தற்போது முதல்வர் ஆட்சிக்கு வந்தவுடன் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அந்தப் பணிகளை முறைப்படுத்தி வருகிறோம்.
ஆவின் சேர்மன் தேர்தல் பொறுத்தவரை ஒட்டுமொத்த தீர்மானம் ஏற்றி கலைத்துவிட்டோம். அதனுடைய கோப்பு ஆளுநர் கையெழுத்துக்காக காத்திருக்கிறது. ஆளுநர் கையெழுத்து போட்டவுடன் சேர்மன் தேர்தல் நடைபெறும். கள்ளக்குறிச்சி திருப்பத்தூரில் புதிய பால்பண்ணை திறக்கப்பட உள்ளது. நேற்று நாமக்கல்லில் பால்பண்ணை ஏறக்குறைய அதனை பதப்படுத்தி விநியோகம் செய்ய உள்ளோம். ஆவின் நிர்வாகத்தில் ஊழல் புகாரில் யார் தவறு செய்திருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும்.
ஆவின் பாலகங்களில் ஏதேனும் தவறுகள் நடப்பதாக தகவல் வந்தால் ஆய்வு செய்து சீல் வைக்கப்படும். ஆவின் பாலகத்தில் சிக்கன் போன்ற பொருட்கள் விற்பனை செய்ய கூடாது. இதனால் மூன்று கடைகள் ஏற்கனவே ரத்து செய்யப்பட்டுள்ளது. ஆவின் ஹெல்த் மிக்ஸ் குறித்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் புகார் கருத்துக்கு வழக்கு தொடர வாய்ப்புண்டு. எங்களுடைய தரத்திற்கு ஏற்றவாறு பேசினால் அவருக்கு பதிலளிக்கலாம். அவர் நோட்டாவை விட கம்மியான ஓட்டுகள் வாங்கியவர். அண்ணாமலை தவறான கருத்தையும் தன்னை முன்னிலைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதற்காக நானும் இருக்கிறேன் என காட்டிக் கொள்கிறார். வடிவேலு ஒரு படத்தில் சொல்வது போல் ‘நானும் ரவுடி நானும் ரவுடி’ என அண்ணாமலை கூறி வருகிறார்.
ஹெல்த் மிக்ஸ் விற்பனை இன்னும் தொடங்கவே இல்லை. அதற்கு முன்பே 27 கோடி வாங்கி விட்டார்கள் என அபாண்டமான குற்றச்சாட்டை அண்ணாமலை சொல்கிறார். அவருக்கு அதற்கான அரிச்சுவடி கூட தெரியாது. இவர், எப்படி ஐபிஎஸ் ஆனார் என்று தெரியவில்லை. கடந்த 10 ஆண்டை காட்டிலும் உற்பத்தியும் விற்பனையும் ஆவின் நிர்வாகத்தில் அதிகரித்துள்ளது’ என்று தெரிவித்தார்.
– நவீன் டேரியஸ்
+ There are no comments
Add yours