TN SSLC Result 2022 date: 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வரும் ஜூன் 20ம் தேதி அன்று பொதுத் தேர்வு முடிவுகள் வெளியாக இருப்பதாக பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு, செப்டம்பர் மாதம் மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடத்தப்பட்டன. அதன்படி தமிழகத்தில் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த மே மாதம் 30-ம் தேதி முடிவடைந்தது. இந்த தேர்வை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் சுமார் 9.55 லட்சம் மாணவ மாணவிகள் பங்கேற்று எழுதினர். அதனைத் தொடர்ந்து விடைத்தாள் திருத்தும் பணி தொடங்கியது. பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு 2022 விடைத்தாள் திருத்தும் பணிகள் திட்டமிட்டப்படி முடிவடைந்த நிலையில், தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும் என மாணவர்கள் காத்திருக்கின்றனர்.
இந்நிலையில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நாளை தேதி அன்று பொதுத் தேர்வு முடிவுகள் வெளியாக இருப்பதாக பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. தேர்வு முடிவுகளை மாணவர்கள் www.tn result.nic.in, www.dge 1.nic.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம் என்று கூறப்பட்டுள்ளது. 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொது தேர்வு முடிவுகளை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் தகவல் மையங்களிலும், அனைத்து நூலகங்களிலும் கட்டணம் இன்றி அறிந்து கொள்ளலாம் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. அத்துடன் மாணவர்கள் தங்களுடைய பள்ளிகளிலும் மதிப்பெண்களுடன் கூடிய தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
10 மற்றும் 12வதுக்கான தேர்வு முடிவை எவ்வாறு சரிபார்ப்பது
* முதலில், அதிகாரப்பூர்வ இணையதளங்களை பார்வையிடவும் – www.tnresult.nic.in, www.dge1.nic.in
* இப்போது முகப்புப்பக்கத்தில் காணப்படும் முடிவுகளின் பட்டியலை பார்வையிடவும்.
* அதில், ‘எஸ்எஸ்எல்சி தேர்வு 2022 முடிவுகள்’ அல்லது ‘ஹெச்.எஸ்.சி தேர்வு 2022 முடிவுகள்” என்ற இணைப்பைக் கிளிக் செய்யவும்.
* இப்போது, பொதுத்தேர்வுகளை சரிபார்ப்பதற்காக சாளரம் திறக்கப்படும்.
* அதில், உங்களின் பதிவு எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளிடவும்.
* பின்னர், “மதிப்பெண்களைப் பெறுங்கள்” பொத்தானைக் கிளிக் செய்யவும்.
இப்போது, தமிழ்நாடு போர்டு தேர்வு முடிவுகள் திரையில் காண்பிக்கப்படும்.
தேர்வு முடிவு வெளியடப்படும் நாள் மற்றும் நேரம்
* தேர்வு முடிவுகள் ஜூன் 20 ஆம் தேதி காலை 9.30 மணிக்கு வெளியிடப்படும்.
* இணையதள முகவரி : www.tnresults.nic.in, www.dge1.tn.nic.in, www.dge2.tn.nic.in, www.dge.tn.gov.in.
– Vijaya Lakshmi
+ There are no comments
Add yours