பெங்களூரு:
பெங்களூரு ஜே.பி. நகரைச் சேர்ந்தவர் சுவாதி. கன்னட திரைப்படங்களில் நடித்து வரும் இவர் பல் வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். பின்னர் ஹெண்ணூரில் உள்ள தனியார் பல் மருத்துவமனையில் சிகிச்சைக்குச் சென்றுள்ளார். அங்கு மருத்துவர், மருந்துக்குப் பதில் ஊசி ஒன்றைக் கொடுத்து அதைச் செலுத்திக் கொள்ளும்படி கூறியுள்ளார். இதனால் சுவாதியும் அந்த ஊசியை செலுத்தியுள்ளார்.
ஆனால், ஊசி செலுத்திக் கொண்ட சில மணி நேரத்திலேயே அவரது முகம் வீங்கியுள்ளது. இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த சுவாதி உடனே மருத்துவரைத் தொடர்பு கொண்டு கேட்டதற்கு சிறிது நேரத்தில் வீக்கம் குறைந்துவிடும் என மருத்துவர் கூறியுள்ளார். ஆனால் முக வீக்கம் குறையவில்லை. இதையடுத்து அந்த மருத்துவமனையின் தவறான சிகிச்சை குறித்து சுவாதி குற்றம்சாட்டியுள்ளார்.
– Pradeep
+ There are no comments
Add yours