ஆலப்புழா:
காவல் ஆய்வாளரை வெட்டி கொலை செய்வதற்காக பின்தொடர்ந்து வந்த நபர், அரிவாளால் வெட்டி கொலை செய்ய முயலும் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
ஆலப்புழா, நூறநாடு பகுதியிலுள்ள காவல் நிலையத்தில் ஆய்வாளராக பணி செய்து வருபவர் அருண் குமார். கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று அருண் குமாரின் காரை பின்தொடர்ந்து வந்த நபர் ஒருவர் பாயல் என்னும் பகுதியில் வைத்து தனது இருசக்கர வாகனத்தில் மறைத்து வைத்திருந்த வாளை எடுத்து காவல் ஆய்வாளர் அவரை வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். அதிர்ஷ்டவசமாக காவலர் உயிர் தப்பிய அருண்குமார் அந்த நபரை கைது செய்தார்.
விசாரணையில் அவர் அதே பகுதியை சார்ந்த சுகுதன் என்பது தெரியவந்துள்ளது. காவல் ஆய்வாளரை வெட்டிக் கொலை செய்வதற்காக காரணம் என்ன என்பது இதுவரையும் தெரியவரவில்லை, இந்த நிலையில் காவல் ஆய்வாளர் குமார் வெட்டி கொலை செய்ய முயலும் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-P
+ There are no comments
Add yours