இலங்கை:
எரிபொருள் நெருக்கடிக்கு மத்தியில் இலங்கையில் பள்ளிகள் 2 வாரங்களுக்கு மூடப்படுகிறது. 1948 இல் சுதந்திரம் பெற்ற பின்னர் இலங்கை அதன் மோசமான பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது, மேலும் கடந்த ஆண்டு பிற்பகுதியில் இருந்து உணவு, மருந்துகள் மற்றும் எரிபொருள் போன்ற தேவைகளை இறக்குமதி செய்வதற்கு நிதியளிக்க முடியவில்லை. இதனால் இந்த வார தொடக்கத்தில், எரிபொருளைச் சேமிக்கும் முயற்சியில், வெள்ளிக்கிழமையை விடுமுறை நாளாக அதிகாரிகள் அறிவித்தனர். இருப்பினும் நேற்று பெட்ரோல் நிலையங்களுக்கு வெளியே நீண்ட வரிசைகள் காணப்பட்டன, பல வாகன ஓட்டிகள் தங்கள் எரிபொருள் நிரப்ப பல நாட்கள் காத்திருந்ததாகக் கூறினர்.
இதையடுத்து எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக திங்கட்கிழமை முதல் இரண்டு வாரங்களுக்கு அனைத்துப் பள்ளிகளும் மூடப்படும் என்றும், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு மின்சாரம் கிடைத்தால் ஆன்லைன் கற்பித்தலை உறுதி செய்யுமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
-Laxman
+ There are no comments
Add yours