கேரள:
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தை அடுத்த பட்டம் என்னும் பகுதியில் உள்ள சென்மேரிஸ் பள்ளியில் படிக்கும் 20 மாணவர்களை கொண்ட கும்பல் ஒரு மாணவனை தாக்கும் செல்போன் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பள்ளி வகுப்பறையில் ஏற்பட்ட வாய்த்தகராறு காரணமாக நேற்று காலையில் பள்ளிக்கு செல்வதற்காக பேருந்திற்காக காத்திருந்த ஒரு மாணவனை 20 பேர் கொண்ட பள்ளி மாணவர் கும்பல் நடுரோட்டில் போட்டு தாக்கியுள்ளனர்.
இதில் படுகாயமடைந்த 11ஆம் வகுப்பு படிக்கும் டானியல் என்ற மாணவன் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சமூக வலைதளங்களில் பரவி வைரலாகிய இந்த வீடியோவால் விசாரணை நடத்திய பட்டம் போலீசார் பள்ளி மாணவர்கள் என்பதால் வழக்குபதிவு செய்யாமல் வீடியோவை ஆதாரமாக வைத்து, வீடியோவில் உள்ள பள்ளி மாணவர்கள் மற்றும் அவரது பெற்றோர்களையும் காவல் நிலையத்தில் நேராக அழைத்து அறிவுரை கூறி அனுப்பி வைத்துள்ளனர்.
–
+ There are no comments
Add yours