மீண்டும் மாஸ்க் : கல்வி நிறுவனங்களுக்கு கடிதம் எழுதி வலியுறுத்திய மாநகராட்சி..!

Estimated read time 1 min read

சென்னை: 

காய்ச்சல், இருமல், தொண்டை வலி போன்ற அறிகுறிகள் இருந்தால் சுகாதார நிலையங்களை அணுகி RTPCR பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள கல்வி நிறுவனங்கள் மாணவர்களை முகக்கவசம் அணிய அறிவுறுத்த வேண்டும் என சென்னை மாநகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பள்ளிகள், கல்லூரிகள் என அனைத்து கல்வி நிறுவனங்களும் தங்கள் மாணவர்களை முகக்கவசம் அணிய அறிவுறுத்த வேண்டும் என சென்னை மாநகராட்சி கல்வி நிறுவனங்களுக்கு கடிதம் எழுதியுள்ளது.

காய்ச்சல், இருமல், தொண்டை வலி போன்ற அறிகுறிகள் இருந்தால் சுகாதார நிலையங்களை அணுகி RTPCR பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சென்னையில் கடந்த சில நடகளாக கொரோனா தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. பள்ளிகள் மற்றும் கல்லூரிகளும் தற்போது திறந்துள்ள நிலையில், தொற்று பரவுவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகரித்துள்ளன. இந்த நிலையில், மாணவர்கள் கட்டாயமாக முகக்கவசங்களை அணிய வேண்டும் என மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது.

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 552 பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். இதனுடன் தமிழகத்தில் இதுவரை தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை  34,58,997 ஆக உயர்ந்துள்ளது.

புதன்கிழமை அன்று 3 மாதங்களுக்கு பிறகு தமிழகத்தில் கொரோனா தொற்றால் ஒருவர் உயிர் இழந்தார் என்பது குறிப்பிட்டத்தக்கது. தஞ்சாவூரில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்த ஒரு இளம்பெண் உயிரிழந்துள்ளார். அவருக்கு எந்தவித இணைநோயும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் தொற்றின் பிடியில் சிக்கி உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கை 38,026 ஆக உள்ளது. தமிழகத்தில் தற்போது சிகிச்சையில் இருப்பவர்களின் எண்ணிக்கை 2,313 ஆக உள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில், கொரோனா தொற்றிலிருந்து குணமாகி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 177 ஆக உள்ளது. இதுவரை தொற்றிலிருந்து மொத்தம் குணமானவார்களின் எண்ணிக்கை 34,18,658 ஆக உள்ளது.

தமிழகத்தில் நேற்று பதிவான மாவட்ட அளவிலான கொரோனா பாதிப்பு பட்டியல் இதோ:

                                                                                                            – Sripriya Sambathkumar

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours