“தேடப்படும் குற்றவாளிகளில் பலர் பாஜகவின் நிர்வாகிகள்” – கி.வீரமணி பரபரப்பு குற்றச்சாட்டு

Estimated read time 1 min read

கும்பகோணம்:

K Veermani Blame On Annamalai Bjp : தமிழகத்தில் தேடப்படும் குற்றவாளிகள் அதிகம் உள்ளவர்களின் கட்சியாக பாஜக உள்ளது என்று திராவிடர் கழகத் தலைவர் கி வீரமணி குற்றம்சாட்டியுள்ளார்.

கும்பகோணம், பாபநாசம் போன்ற இடங்களில் பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக கும்பகோணம் வந்திருந்த திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவரிடம், சனாதன தர்மம் அனைவருக்கும் சமம் என அண்ணாமலை தெரிவித்திருக்கிறாரே என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்குப் பதிலளித்த கி.வீரமணி, சனாதன தர்மத்தை சரியாக படிக்காத அரைவேக்காடு அண்ணாமலை என்று காட்டமாக பதிலளித்தார்.

சனாதன தர்மம் என்பது அனைவரும் சமம் அல்ல என்று கூறுவதாக தெரிவித்த கி.வீரமணி, இதுதொடர்பாக 1914 ஆம் ஆண்டு வெளியான புத்தகங்கங்களைக் காட்டி பல்வேறு பகுதிகளை சுட்டிக்காட்டினார். சனாதன தர்மம் என்பது ஏற்றத்தாழ்வுகள் உள்ளது என்றும் இதனை சரியாகப் படிக்காத அண்ணாமலை அரைவேக்காடு அண்ணாமலை என்றும் கூறினார்.

அதுமட்டுமல்லாமல், தேடப்படும் குற்றவாளிகளில் பலர் பாஜகவில் நிர்வாகிகளாக உள்ளதாகவும், பாஜக எந்த அளவிற்கு வளர்ச்சி அடைந்துள்ளது என்பதை அதிமுகவைச் சேர்ந்த பொன்னையனிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம் எனவும் கூறினார். பாஜகவின் அண்ணாமலை எங்கேயாவது தமிழ் நாட்டைப் பற்றியோ ? தமிழ் நாட்டு மக்களைப் பற்றியோ, பேசியுள்ளாரா? முதலில் பாஜக ஆட்சியில் விலைவாசி பட்டியலை பார்க்கட்டும் என்று விமர்சித்தார்.

தொடர்ந்து பேசிய கி.வீரமணி, இந்தியாவில் அவசரக் கால சட்டம் அமலில் இருந்த காலத்தில் மாநிலப் பட்டியலில் இருந்த கல்வி ஒத்திசை பட்டியலுக்கு மாற்றப்பட்டதாகவும், இதனை மீண்டும் மாநிலப் பட்டியலுக்கு கொண்டு வர வேண்டும் என கல்வியாளர்கள் உள்ளிட்ட பலர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளதாகவும் குறிப்பிட்டார். தற்போது இந்த வழக்கு நிலுவையில் உள்ளதாக வீரமணி தெரிவித்தார்.

2024 ஆம் ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் பாஜக 25 இடங்களில் வெற்றி பெறும் என்றும், தேசிய அளவில் 400 இடங்களில் வெற்றி பெறும் எனவுத் அண்ணாமலை தெரிவித்துள்ளாரே? என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த கி.வீரமணி, அப்துல் கலாம் கனவு காணுங்கள் என்றார், அண்ணாமலை நன்றாக கனவு காணட்டும் என்று கிண்டலடித்தார்.

                                                                                                                    – நவீன் டேரியஸ்

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours