ராஜஸ்தான்:
ராஜஸ்தான் மாநிலத்தில் அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது. இந்த நிலையில் முதல்-மந்திரி அசோக் கெலாட்டின் சகோதரரும், உர வியாபாரியுமான அக்ரசென் கெலாட்டின் ஜோத்பூர் வீட்டில் இன்று சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனை செய்தனர். 2007 முதல் 2009-ல் ஆண்டு வரை மானிய விலையில் உரத்தை ஏற்றுமதி செய்து ஊழலில் ஈடுபட்டதாக அக்ரசென் கெலாட் மீது குற்றம் சாட்டப்பட்டது.
இது தொடர்பாக அவரிடம் அமலாக்கத்துறை விசாரித்து இருந்த நிலையில் இன்று சி.பி.ஐ. சோதனை நடந்துள்ளது. உர ஊழல் தொடர்பாக சி.பி.ஐ. புதிய வழக்கை பதிவு செய்துள்ளதை அடுத்து இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டது. ஜோத்பூரில் உள்ள அக்ரசென் கெலாட்டின் வீடு மற்றும் அவருக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடந்தது.
-R Mohan
+ There are no comments
Add yours