“இவங்க கையில ஸ்கூல் போக போகுது” பள்ளியில் ஜாதி வெறியை வளர்க்கும் டீச்சர்..!

Estimated read time 1 min read

தூத்துக்குடி:

மாணவனிடம் சாதி ரீதியாக பேசியதாக இரண்டு ஆசிரியர்கள் தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

நீ என்ன சாதி … அந்த சாதி நிர்வாகத்தில் வந்து விடக்கூடாது – விளாத்திகுளம் அருகே பள்ளி மாணவரிடம் சாதி ரீதியாக அரசு பள்ளி உதவி தலைமை ஆசிரியை பேசியதாக சர்சை ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.  தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகேயுள்ள குளத்தூரில் செயல்பட்டு வரும் அரசு மேல்நிலை பள்ளி உதவி தலைமை ஆசிரியை கலைச்செல்வி என்பவர் அப்பள்ளி மாணவருடன் சாதி தொடர்பாக பேசியதாக வெளியாகி உள்ள ஆடியோ சர்சையை ஏற்படுத்தியுள்ளது.  தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகேயுள்ள குளத்தூரில் செயல்பட்டு வரும் அரசு மேல்நிலை பள்ளி உதவி தலைமை ஆசிரியராக பணியாற்றி வருபவர் ஆசிரியை கலைச்செல்வி. இவர் அந்த பள்ளியில் பயிலும் முனீஸ்வரன் என்ற மாணவரிடம் செல்போனில் பேசியதாக கூறி வெளியாகி உள்ள ஆடியோ சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது.

அந்த ஆடியோவில் மாணவின் சாதி குறித்து கேட்பது மட்டுமின்றி பள்ளியில் சில ஆசிரியர்களின் பெயரை சொல்லி இவர்களை பிடிக்குமா என்று கேட்க, அந்த மாணவரும் ஆசிரியர்களை பிடிக்கும் என்று சொல்ல தொடர்ந்து உரையாடல் நடைபெறுகிறது. அதில் மாணவரின் ஊரான புளிங்குளத்தினை சேர்ந்தவர்களை சில ஆசிரியர்கள் பள்ளியில் சேர்க்க கூடாது என்று கூறுவதாகவும், தாழ்த்தப்பட்ட வகுப்பினை சேர்ந்த ஆசிரியர்கள் ஆதிக்கம் அதிகமாக இருப்பதாகவும், பள்ளி நிர்வாகம் அவர்கள் கையில் சென்று விடும் என்ற தோனியில் மாணவரிடம் உதவி தலைமை ஆசிரியை பேசுகிறார். மேலும் பெற்றோர் ஆசிரியர் கழக தேர்தலில் மாணவரின் ஊரைச சேர்ந்தவர்கள் போட்டியிட வேண்டும் என்றும், சில ஆசிரியர்கள் சரியாக இருப்பதில்லை என்பது போன்ற உரையாடல் தொடர்கிறது.

பள்ளியில் நடைபெறவுள்ள பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் தலைவரை தேர்ந்தெடுக்க நடத்தப்படும் தேர்தலுக்காக பள்ளி உதவி தலைமை ஆசிரியை பள்ளி மாணவரிடம் சாதி ரீதியாக பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பான ஆடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.  இது குறித்து சம்பந்த பட்ட உதவி தலைமை ஆசிரியை கலைச்செல்விடம் கேட்ட போது தனது ஆடியோ இல்லை, எடிட் செய்துள்ளதாகவும், தான் நல்ல முறையில் பாடம் நடத்துவேன், மாணவர்கள் என்ன சாதீ என்று கூட தெரியாது, தன்னை பிடிக்காதவர்கள் இது போன்று செய்துள்ளதாக கூறியுள்ளார்.

முழுமையான விசாரணை நடத்தினால் இதில் உண்மை வரும், அனைவரும் சமம் என்பதனை கற்ப்பிக்க வேண்டி ஆசிரியர் சாதி குறித்து பேசியதாக வெளியாகி உள்ள ஆடியோ சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது. அது மட்டுமின்றி அந்த ஆடியோவின் உரையாடல் இரு வெவ்வேறு சாதிகளின் இடையே மோதல்களை உருவாக்கும் வகையில் துண்டிவிடப்படுவது போல் இருப்பதாக பலரும் குற்றம் சாட்டியுள்ளனர்.  இந்நிலையில் இன்று ஆடியோ தொடர்பாக, சம்பந்தப்பட்ட பள்ளி ஆசிரியர் கலைச்செல்வி மற்றும் மீனா ஆகியோரிடம் இன்று மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் விசாரணை மேற்கொண்டார்.  பின்பு இருவரையும் தற்காலிக பணியிடை நீக்கம் செய்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார்.

                                                                                                                                    – RK Spark

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours