கும்பகோணத்தில் வெறிச்செயல்; புதுமண தம்பதிக்கு நேர்ந்த சோகம்..!

Estimated read time 1 min read

தஞ்சாவூர்:

கும்பகோணத்தில் காதல் திருமணம் செய்து கொண்டு ஊருக்குள் வந்த புதுமண தம்பதி வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் தாலுகா துலுக்கவெளி அய்யா கோயில் தெருவைச் சேர்ந்த சரண்யா வயது 22 சென்னையில் நர்சிங் வேலை செய்து வரும் இவரை திருவண்ணாமலை பொன்னூர் பகுதியைச் சேர்ந்த மோகன் வயது 32 இவரும் காதலித்து வந்துள்ளார். இந்த நிலையில் சரண்யா வீட்டில் மோகன் பெண் கேட்ட போது அவரது ஜாதியை குறிப்பிட்டு பெண் தர சரண்யா வீட்டில் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனையடுத்து சரண்யாவின் சகோதரரான சக்திவேல் தனது மைத்துனர் ரஞ்சித் என்பதற்கு சரண்யாவை திருமணம் முடிக்க ஏற்பாடுகள் செய்து உள்ளார்.

இதனால் இவர்கள் இருவரும் ஒன்று சேர மாட்டோம் என தெரிந்து கொண்ட மோகனும் சரண்யாவும் கடந்த 5 நாட்களுக்கு முன்னர் வீட்டை விட்டு வெளியேறி நண்பர்கள் உதவியுடன் திருமணம் செய்து கொண்டனர். இதை அறிந்த சக்திவேல் கடும் ஆத்திரமடைந்தார். அதன்படி புதுமண தம்பதிகளை விருந்துக்கு அழைப்பதாக கூறி அவரது சகோதரர் சக்திவேல் வரவழைத்துள்ளார். இதனை நம்பி சரண்யா மற்றும் மோகன் இருவரும் வீட்டிற்கு வந்து உள்ளனர்.

அப்போது புதுமணத் தம்பதிகள் வீட்டிற்குள் நுழைவதற்கு முன் இருவரும் தண்ணீர் கொடுத்துள்ளனர். தண்ணீரை வாங்கி தம்பதிகள் குடித்த போது அவரது சகோதரர் சக்திவேல் மற்றும் மைத்துனர் ரஞ்சித் ஆகிய இருவரும் புதுமண தம்பதிகளை வெட்டி உள்ளனர். அந்த வகையில் தற்போது இந்த சம்பவம் தொடர்பாக  தகவலறிந்த போலீஸார் சம்பவ இடத்திற்கு வந்து இருவரது சடலத்தையும் கைப்பற்றினர். மேலும் பெண்ணின் சகோதர் சக்திவேல் மற்றும் மைத்துனர் ரஞ்சித் இருவரும் கும்பகோணம் காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளனர்.

மேலும் சோழப்புரம் காவல்துறையினர் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் கொலை தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதற்கிடையில் கும்பகோணம் அருகே சோழபுரம் துலுக்கவேலி கிராமத்தில் நிகழ்ந்த இரட்டை கொலை சம்பவம் ,குடும்ப பிரச்சினை காரணமாக நடைபெற்றது என்றும், இக்கொலைகள் தொடர்புடைய இருவர்கைது செய்யப்பட்டிருப்பதாகவும், இவர்களிடம் காவல்துறையினர் விசாரணை வருவதாக தஞ்சாவூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி ரவளிப்பிரியா சோழபுரத்தில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

கடந்த சில காலங்களாக ஜாதி விட்டு ஜாதி திருமணம் செய்து கொள்வோர் மீது கொலையும் கொலை வெறி தாக்குதலும் நடத்தப்பட்டு வருகிறது. இது போல் இந்தியா முழுவதும் நிறைய சம்பவங்கள் நடந்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

                                                                                                                      – Vijaya Lakshmi 

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours