தகவல் பரிமாற்றத்திற்கு வாட்ஸ் அப் செயலியை போலவே டெலிகிராம் செயலியும் அதிக அளவில் மக்களால் பயன்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது டெலிகிராம் அப்டேட் குறித்த புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அதில் டெலிகிராம் செயலியில் புதிய பிரீமியம் பிளான் ஒன்றை அந்த நிறுவனம் அறிமுகம் செய்ய உள்ளதாக அந்நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி தெரிவித்துள்ளார். பிரீமியம் பிளான் போன்ற பிரத்யேக வசதிகளை பயனர்கள் பயன்படுத்த கட்டணம் வசூலிக்கப்படவுள்ளதாக அவர் அறிவித்துள்ளார்.
அதே நேரத்தில் தற்போது டெலிகிராம் செயலியை பயன்படுத்தி வருபவர்களுக்கு எந்த கட்டணமும் இல்லாத பழைய நடைமுறையே தொடரும் என பாவெல் துரோவ் தெரிவித்துள்ளார். இந்த புதிய பிரீமியம் பிளான் இந்த மாதம் அறிமுகமாகலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
-Prabhanjani Saravanan
+ There are no comments
Add yours