சென்னை:
Tamil Nadu 10th Result 2022 – தமிழ்நாடு 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் ஜூன் 17 அன்று tnresults.nic.in-ல் அதிகாரப்பூர்வமாக வெளியாக உள்ளது.
இந்தியா முழுவதும் கொரோனா தொற்று காரணமாக கடந்த சில ஆண்டுகளாக மாணவர்களின் படிப்பு வெகுவாக பாதித்தது. தமிழகத்தில் மாணவர்களுக்கு தேர்வுகள் வைக்காமல் அடுத்த ஆண்டிற்கு நேரடியாக தகுதி பெற்றனர். இந்த ஆண்டு கொரோனா தாக்கம் சற்று குறைந்து உள்ளதால் மாணவர்களுக்கு நேரடி தேர்வு நடைபெறும் என்று அரசு அறிவித்து இருந்தது. இந்நிலையில் கடந்த மே மாதம் பத்தாம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு தேர்வு நடைபெற்றது. இதில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மொத்தமாக 9.55 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதினர்.
காலை 10 மணி முதல் மதியும் 1.30 மணி வரை தேர்வுகள் நடைபெற்றது. மாணவர்களுக்காக அதிக பேருந்து வசதியும் தமிழக அரசின் சார்பாக செய்து தர பட்டு இருந்தது. இந்த தேர்வுக்கான அட்டவணை மார்ச் மாதமே பள்ளிக்கல்வித்துறை சார்பாக வெளியிட பட்டு இருந்தது. கடந்த ஆண்டை போல இந்த ஆண்டும் ஆன்லைனில் தேர்வுகள் நடத்தப்படாத என்று மானவர்கள் எதிர்ப்பார்த்து காத்திருந்த நிலையில், நேரடியாக தேர்வுகள் நடைபெறும் என்று அரசு திட்டவட்டமாக கூறி இருந்தது.
கொரோனா சூழலை கருத்தில் கொண்டு மிகவும் பாதுகாப்புடன் தேர்வுகள் நடைபெற்றது. தற்போது விடுமுறை முடிந்து பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில் 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும் என்று அனைவரும் எதிர்பார்த்து காத்திருந்தனர். ஜூன் 17ம் தேதி முடிவுகள் வெளியாகும் என்றும் tnresults.nic.in தளத்தில் முடிவுகளை பார்க்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.
– RK Spark
+ There are no comments
Add yours