இந்தியா:
கடந்த 2016ஆம் ஆண்டில் மும்பை ரயில் நிலையத்தில் இலவச வைஃபை வசதி அறிமுகப்படுத்தப்பட்டது. தற்போது நாடு முழுவதும் பல்வேறு ரயில் நிலையங்களில் இந்த வசதி அறிமுகம் செய்யப்பட்டு செயல்பட்டில் உள்ளது.
இந்நிலையில் இந்த இலவச வைஃபை சேவையை பயனர்கள் ஆபாச படம் பார்க்கவும், டவுன்லோடு செய்யவுமே அதிகம் பயன்படுத்தி வருகின்றனர் என்பது தற்போது தெரியவந்துள்ளது.
இலவச வைஃபை சேவை வழங்கிவரும் ரெயில்டெல் நிறுவனத்தின் அதிகாரி ஒருவர் ஆங்கில ஊடகத்துக்கு அளித்த தகவலின்படி, தெற்கு மத்திய ரெயில்வேயின் கீழ் வரும் செகந்திராபாத்தில் தான் அதிகபட்சமாக ஆபாச வீடியோக்கள் டவுன்லோடு செய்யப்பட்டு உள்ளன.
அதைத் தொடர்ந்து ஐதராபாத், விஜயவாடா மற்றும் திருப்பதி ஆகியவை உள்ளன. குறிப்பாக செகந்திராபாத், விஜயவாடா ரயில் நிலையங்களில் மட்டும் வைஃபை சேவையை பயன்படுத்தி 35% ஆபாச படங்கள் தரவிறக்கம் செய்யப்படுவதாக கூறப்படுகிறது.
தென் மத்திய ரெயில்வே 588 நிலையங்களுக்கு இணையச் சேவைகளை நீட்டிக்க விரும்பினாலும், ரெயில் நிலையங்களில் இணைய அலைவரிசையின் வேகம் குறைவாக இருப்பதால் இலவச வைஃபை தவறாகப் பயன்படுத்துவதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் பெரும்பாலான ஆபாச பட தளங்கள் தடை செய்யப்பட்டுள்ள போதிலும் விபிஎன் போன்ற தொழில்நுட்பங்களை பயன்படுத்தி ஆபாச படங்களை பயனர்கள் தரவிறக்கம் செய்கின்றனர்.
-Pradeep
+ There are no comments
Add yours