திமுக அரசை வசமாக ஏமாற்றிய அதிமுக நிர்வாகி! இடையில் ஒரு வங்கிமோசடி..!

Estimated read time 1 min read

நாமக்கல்:

வெளிநாட்டில் இருக்கும் சகோதரர் பெயரில் கூட்டுறவு கடன் சங்கத்தில் போலியாக கணக்கு தொடங்கி ரூ.1.50 லட்சம் பயிர் கடன் பெற்று மோசடியில் ஈடுபட்ட அதிமுக நிர்வாகி மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி  கூட்டுறவு சங்க பதிவாளரிடம்  மாநிலங்களவை உறுப்பினர்  ராஜேஷ்குமார் புகார் அளித்துள்ளார்.

நாமக்கல்லில் மாநிலங்களவை உறுப்பினர் கே.ஆர்.என்.ராஜேஷ்குமார் இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், நாமக்கல் மாவட்டம் ஆரியூர் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கம் செயல்பட்டு வருகிறது. இந்த கடன் சங்கத்தில் கடந்த 2018, 2019,2020 ஆகிய ஆண்டுகளில் தலைவராக இருந்தவர் ஏ.சி.மணி. இவர் தற்போது அதிமுக மோகனூர் ஒன்றிய அவைத்தலைவராக இருந்து வருகிறார்.

இவர் வெளிநாட்டில் இருக்கும் தனது சகோதரர் சுப்ரமணி என்பவர் பெயரில் போலி கையெழுத்திட்டு கணக்கு தொடங்கி ரூ.1,50,000  வட்டியில்லா பயிர் கடன்  பெற்று மோசடி செய்துள்ளார்.

அவர் வாங்கிய கடன் தொகை திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு தள்ளுபடியும் செய்யப்பட்டுள்ளது. இவர் இதுபோன்று மூன்று முறை வட்டியில்லா கடன் பெற்று மோசடி செய்துள்ளதாகவும் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர்,  வெளிநாட்டில் இருப்பவருக்கு பயிர் கடன் வழங்கிய அதிமுக பிரமுகர் ஏ.சி.மணி மீது நடவடிக்கை எடுக்க கோரி வேண்டும் என கூட்டுறவு சங்கங்களின் பதிவாளரிடம் புகார் அளித்துள்ளதாகவும் தெரிவித்தார்.

                                                                                                                       – Geetha Sathya Narayanan 

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours